மண்டை ஓட்டின் அடிப்பகுதியில், கரப்பான் பூச்சி !

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு பெண்ணின் மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் உயிருடன் இருந்த ஒரு கரப்பான் பூச்சியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி யுள்ளனர்.
மண்டை ஓட்டின் அடிப்பகுதியில், கரப்பான் பூச்சி !
சென்னையில் ஒரு பெண்ணின் மூளையில் 12 மணி நேரம் உயிருடன் தங்கியிருந்த கரப்பான் பூச்சியை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனை மருத்துவ ர்கள் அகற்றினர்.

சென்னை ஈஞ்சம் பாக்கத்தைச் சேர்ந்த செல்வி (42) மூன்று நாட்க ளுக்கு முன்பு, தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வலது மூக்கு துவாரத்தின் வழியாக ஏதோ ஊர்ந்து சென்றதை உணர்ந்தார்.

அதன் பின்னர் குடைச்சலும், அரிப்பும் அதிகரித்தது. ஒரு தனியார் மருத்துவ மனையில் சோதித்துப் பார்த்ததில் எதுவும் தென்பட வில்லை.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவுக்கு வந்த செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூக்கின் உள்ப குதியில் ஒரு கரப்பான் பூச்சி இருப்பதையும்,

அது மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் உயிரோடு உலவிக் கொண்டிருப் பதையும் கண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அதை உயிரோடு வெளியே எடுத்தனர்.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

செல்வி மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் சுமார் 12 மணி நேரம் அந்த கரப்பான்பூச்சி உயிருடன் இருந்திருக்கிறது. அதை கவனத்துடன் வெளியேற்றி யதால் நோயாளிக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

இதுபோல இந்த இடத்தில் கரப்பான்பூச்சி 12 மணி நேரம், அதுவும் உயிருடன் அகற்றப்பட்டது மிகவும் அரிதானது. 

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது என்றார் டாக்டர் எம்.என்.சங்கர் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings