சசிகலாவுக்கு ஆதர வாகவும், எதிராகவும் பரப்பன அக்ரஹாரா அருகே கோஷங்கள் எழுந்தன. 6 கார்கள் கண்ணாடி உடைக்கப் பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலாவும்,
இளவரசியும் இன்று மாலை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அமைந் துள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். நீதிபதி அஸ்வத் நாராயண் முன்னி லையில் அவர்கள் சரணடைந்தனர்.
சசிகலா ஆதரவா ளர்கள், ஓ.பி.எஸ் ஆதரவா ளர்கள் மாறி மாறி கோஷங்கள் எழுப்பினர். ஜெயலலிதா வை குற்ற வாளியாக மாற்றியதே இந்த சசிகலா தான் என்று ஜெயலலிதா
மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவா ளர்கள் கோஷ மிட்டனர். சசிகலா உடன் வந்திருந்த ஸ்கார்பியோ கார் கண்ணாடியை ஓ.பி.எஸ் ஆதரவா ளர்கள் உடைத்தனர்.
இதை யடுத்து மேலும் 5 கார் கண்ணாடி களும் உடைக்கப் பட்டன. செருப்பால் கார்களை ஆவேசமாக அடித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், தாக்குதல் நடத்திய வர்களை லேசான தடியடி நடத்தி விரட்டி யடித்தனர்.