பீட்டாவை தேடினால் ஆபாச படம் !

0 minute read
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்ற போது பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க கோரி கோஷம் எழுப்பட்டது. பீட்டா அமைப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

பீட்டாவை தேடினால் ஆபாச படம் !
மத்திய அரசு பீட்டா விவகாரத்தில் கவனத்தில் எடுப்பதாக கூறியது. இப்போது பீட்டா இணைய தளத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. 

ஆபாச படங்கள் இருப்பதால் பீட்டா இணைய தளத்தை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

பீட்டா பற்றி இணைய தளத்தில் தேடினால் ஆபாச படங்களே வருகிறது, படங்களை குழந்தைகள் பார்க்கும் போது மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பு என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:
Today | 15, April 2025
Privacy and cookie settings