நீங்கள் வேலை இல்லாப் பட்டதாரியா?

'உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது என்பதை, வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்' - இந்த வாக்கியம் அடங்கிய கடிதத்தையோ, 
மின்னஞ்சலையோ வேலைதேடும் இளைஞர்கள் பெரும்பாலானோர் எதிர் கொண்டிருக்கக் கூடும்.


வேலைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவ தென்பது மிகச் சாதாரணமான ஒன்று. 

நாளொன்றுக்கு நூற்றுக் கணக்கான விண்ணப்பங்களை நிராகரிக்கும் பெரு நிறுவனங்கள், நிராகரிப்பின் பின்னுள்ளக் காரணங்களைச் சொல்லுவ தில்லை.

வேலை கிடைக்கவில்லை என்ற சோகத்தைவிட, எதனால் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது என்ற குழப்பத்தின் சோகமே, பெரும்பாலும் வேலை தேடுபவர்களிடமுள்ளது. 

இவ்வாறு நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள், பெரும்பாலும் ஒரே மாதிரியானத் தவறுகளு காகவே கழித்துக் கட்டப் படுகின்றன.

அப்படிப்பட்ட காரணங்களில் முதன்மையான 10 காரணங்களைக் காண்போம்.

1. ஜிமெயில் - கட்டாயத் தேவை

நம் பெயருக்கு, அடுத்ததாக நமக்கு இன்றியமையாத தேவையாக இருப்பது, மின்னஞ்சல் முகவரி.

அத்தகைய மின்னஞ்சல் முகவரி உருவாக்கு வதற்காக ஆயிரக்கணக் கானத் தளங்கள் இருந்தாலும்,

கூகுள் தளத்தினுடைய ‘ஜிமெயில்’ ல் கணக்கு வைத்திருப்பதே வரவேற்கப் படுகிறது. 

யாஹூ, ரெட்டிஃப், ஹாட்மெயில் என பல்வேறு தளங்கள் உள்ள போதிலும்,

ஆண்டொன்றுக்கு 425 மில்லியன் கணக்காளர்களின் வரவேற்பைப் பெறும் ஜிமெயிலில் உருவாக்கபட்ட 

மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு விண்ணப்பிப்பதே ‘புரஃபெஷனலிஸம்’ ஆகக் கருதப்படுகிறது.

எனவே விண்ணப்பத்தில் உங்கள் ‘ஜிமெயில் ஐ.டி.- ஐ மட்டும் பதிவிடுங்கள்.

2. உங்களை, உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள்

உங்கள் பெயரை உலகுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்று சொன்ன வுடனேயே ஏதோ பெரிய காரியம் என்று பயந்துவிட வேண்டாம். ஃபேஸ்புக், ட்விட்டர், 

லிங்ட்இன் போன்ற சமூக வலைத் தளங்களில் கணக்கு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ‘ப்ரொஃபைல்’ ஐ கூகுளில் தேடிப் பார்க்கும் போது, முதல் பக்கத்தில் உங்கள் பெயர் தெரிந்தாலே உலகத்திற்கு, நீங்கள் அறிமுகமாகி விட்டீர்கள் தானே?

3. சமூக வலைத்தளங்களில் உயிர்ப்புடன் இருங்கள்

நம்மில் பலர் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு டயரி வாங்கி மும்முரமாக எழுதவும் தொடங்கி யிருப்போம்.

நாளடைவில் அப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டதே நமக்கு மறந்து போயிருக்கும். 

அதுபோலவே இன்று பலருக்கும் ‘ட்விட்டர்’ ல் கணக்கொன்று கண்டிப்பாக இருக்கும். 

ஆனால் அவர்கள் கடைசியாக ட்வீட்டியது நான்கு வருடங்களுக்கு முன்னால் இருக்கும்.

உங்களது சமூக வலைத் தளங்களில் தொடர்ச்சியாக செயல்படா விட்டால், நீங்கள் பின்னுக்குத் தள்ளப்படுவீர்கள். 

நூற்றுக் கணக்கானப் பின் தொடர்வோரும், ஆயிரக்கணக் கானப் பின்னூட்டங்களும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. 

தொடர்ச்சியாக, உங்கள் தாக்கத்தையும், எண்ணங் களையும் பதிவிட்டுக் கொண்டிருந்தாலே, நீங்கள் சமூக வலைத் தளங்களில் உயிர்ப்புடன் இருக்கலாம்.

4. கண்ணியமாகக் காட்சி யளியுங்கள்

ஃபேஸ்புக் போன்ற பொதுத் தளங்களில், உங்கள் நிழற்படங்களைப் பதிவிடுவதற்கு முன்னால் நன்றாக சிந்தித்துப் பதிவிடுங்கள்.


லைக்குகளுக்கு ஆசைப்பட்டு, சட்டை யில்லாமலோ, குறைந்த ஆடைகளுடனோ,

சில்லறை சாகசங்கள் ஏதேனும் செய்வது போலவோ, நிழற் படங்களைப் பதிவிட வேண்டாம். 

அது உங்கள் மரியாதையையும் தரத்தையும் அறவே குறைத்துவிடும். ஆகவே சமூக வலைத்தளங்களில் கண்ணியமாகக் காட்சியளியுங்கள்.

5. 'செல்ஃபி’க்கு ‘நோ’ சொல்லுங்க

லிங்ட்இன் போன்ற வலைத்தளங்கள் முற்றிலும் மேலாண்மையியல் தொடர்புடை யதாகவே கருதப் படுகின்றன.

அவற்றில் தற்படங்களை, நிலைச் சித்திரமாக (Profile Picture) வைப்பது 

உங்களது நிறைமுனைப்பைக் (Seriousness) குறைத்து, தகுதி யற்றவராகக் காட்சியளித்து விடும்.

எனவே முடிந்த அளவு தற்படங்களைத் தவிர்த்து விடுங்கள்.

6. எண்கள் நம் கண்கள்

நம்மில் பலரது விண்ணப்பங்களில் காணப்படும் ஒரே எண், நமது அலைபேசி எண்ணாகத்தான் இருக்கிறது.

இது மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு பழக்கமாகும். 

உங்கள் வெற்றிகளையும், சாதனைகளையும் எண்களில் கணக்கிட்டுக் குறிப்பிடும் வண்ணம் எழுதுங்கள். அந்த எண்களே உங்கள் மதிப்பைப் பேசும் மதிப்பெண்க ளாகும்.

7. சம்பிரதாயச் சொற்களை தவிர்த்திடுங்கள்

பொதுவாகத் திருமண அழைப்பிதழ் களில் அச்சிடப்படும் சம்பிரதாயச் சொற்களைப் போல், விண்ணப்பங் களிலும் சில சம்பிரதாயச் சொற்கள் இருக்கின்றன. 

உதாரணமாக, “ நிறுவனத்தின் உயர்வுக்காக அயராது பாடுபடுவேன்”, “நேர்மையாகச் செயல்படுவேன்”,

“உங்களிடம் மாறாத விசுவாசம் கொண்டிருப்பேன்” என்பன போன்ற சொற்கள் ஒரு சடங்காகப் போய் விட்டன. 

அத்தகைய சொற்பிரயோகங்களை நிறுவனங்கள் சற்றும் விரும்புவ தில்லை.

அவற்றைத் தவிர்த்து, நேரிடையாகத் தகவல்களை மட்டும் தெரிவித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள்

8. எழுதி எத்தனை வருஷமாச்சு?

வேலைதேடும் பட்டதாரிகள் பலரும் கல்லூரிக்குப் பிறகு எழுதும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர்.

இது பெரும் தவறாகும். தொடர்ந்து எழுதுங்கள்.


உங்கள் எண்ணங்களைப் பதிவுகளாகவோ, ஆராய்ச்சிக் கட்டுரை களாகவோ, தொடர்பியல் வழி முறைகளாகவோ, வடிவமைத்து எழுதிக் கொண்டே இருங்கள். 

குறைந்தது உங்கள் வலைப் பூவிலாவது பதிவிடுங்கள். இத்தகைய எழுத்து வடிவங்கள் உங்கள் விண்ணப்பத்தில் பலத்த குரல் கொடுக்கும்.

9. அத்தனைக்கும் ஆசைப்படாதே

ஒரு சிலர், ஒரு நிறுவனத்திடம் விண்ணப்பிக்கும் போது, அந்த நிறுவனத்தி லுள்ள அத்தனைப் பணியிடங் களுக்கும் விண்ணப்பிக் கின்றனர்.

இது முற்றிலும் தவறானது. 

உங்கள் பணித் திறமையின் மீதுள்ள நம்பிக்கையை முற்றிலும் அழித்து விடும்.

உங்கள் பணித் திறமை எதுவென அறிந்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் விண்ணப்பிப்பதே சாலச் சிறந்தது.

10. பிழைத் திருத்தம் செய்

ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களைச் சந்திக்கும் ஒரு நிறுவனத்திற்கு,

உங்களது விண்ணப்பத்தை, வார்த்தைக்கு வார்த்தைப் படித்துப் பார்க்கும் பொறுமை நிச்சயம் இருக்காது. 


மேலோட்டமாகப் பார்க்கும் போதே உங்கள் முக்கியச் சொற்கள் தென்படும் வண்ணம் மேற்குறியீடு செய்தல் வேண்டும்.

மேலும் ஒன்றிற்கு இரண்டு முறை பிழைகளைச் சரிபார்க்க வேண்டும். 

முதல் கண்ணோட்டத்திலேயே பிழைகளைக் கண்டு விட்டால் நேரடியாக உங்கள் விண்ணப்பம் குப்பைத் தொட்டிக்குத்தான்.

எனவே பிழையின்றி, மேற்குறிப்பிட்டு விண்ணப்பங்களை அனுப்புங்கள்.
Tags:
Privacy and cookie settings