1. கூச்சம் வேண்டாம்மனித குலத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு இல்லறம். குடும்பத்தின் கட்டுக்கோப்புக்கு காவல் அரணாக விளங்குவது தாம்பத்ய உறவு. தங்களுக்குள் பேசிக் கொள்ளக்கூட தம்பதியருக்குள் தயக்கம்.
கேட்டால் அநாகரிகம் என்ற தவறான கருத்து. இதுவே நிலைத்த மகிழ்ச்சிக்கு உலை வைக்கிறது.
2. தாய்ப்பாலைப் போன்றது வாழ்வதற்கு உணவு எவ்வாறு அவசியமோ, அதைப்போல தாம்பத்ய உறவு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். குழந்தை வளர்ச்சிக்கு வேண்டிய முழு சக்தியும் ஊட்டமும் எப்படி தாய்ப்பாலில் உருவாகி சுரக்கிறதோ,
அதேபோல் இல்வாழ்வில் உடல் வளர்ச்சிக்கும் நலனுக்கும் வேண்டிய ஊக்க சக்தியும் உணர்வுகளும் தாம்பத்யத்தால் உருவாகின்றன. எனவே உடல் உறவு இல்லாத இல்வாழ்க்கை முழுமையான வாழ்க்கையாக அமையாது.
3. பருவம் தூண்டும் ஏக்கம்திருமணம் முடிந்தவுடன் தம்பதியினருக்கு ஏற்படும் ஏக்கம் இயற்கையானதே. பருவ காலத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் உள்ளத்தில் முளை விடுவது இந்த ஏக்கம்.
ஏக்கத்தை அறவழியில் நின்று குடும்ப ரீதியில் தணிக்கும் முறைதான் திருமணம். பின்னர் முதலிரவில் தணிகிறது ஏக்கம்.
4. மின் விளக்குகளைப் போல...இல்வாழ்வின் உடல் உறவு, உணர்வு மையங்களைத் தூண்டி சீரிய முறையில் அங்கங்கள் செயல்படுமாறு செய்து அறிவு வளர வகை செய்கிறது;
உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. சுவிட்ச் போட்டவுடன் கணப் பொழுதில் மின்சாரம் பாய்ந்து மின் விளக்குகள் எரிவதுபோல், தம்பதியினர் சேர்ந்தவுடன் உணர்வுகள் தூண்டப்படுகின்றன.
விளைவு, சுரப்பிகளும் தசை நாண்களும் நரம்புகளும் மெருகேற்றப்பட்டு, நுண்ணிய அறிவும் தெள்ளிய எண்ணமும் மேலோங்கி நிற்கும்.
5. அடிப்படை ரகசியங்கள்ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற முதுமொழியைப் பொய்யாக்க தம்பதியி னருக்கு ஆசையா? இதற்கு தொடர் தாம்பத்ய உறவினால் ஏற்படும் அடிப்படை ரகசியங்களைத் தெரிந்து கொள்வது நல்லது.
அன்பு, பரஸ்பரம் மதித்தல், ஒத்துப்போதல், கோபப் படாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் இருத்தல், உணவு- ஆரோக்கி யத்தில் அக்கறை செலுத்துதல், உடற்பயிற்சி,
செய்யும் தொழிலில் திறமையை வளர்த்துக் கொள்ளுதல், வாழ்க்கையைத் திட்டமிடுதல் ஆகிய வற்றுக்குத் தொடர் உடல் உறவு உதவும். இல்லற வாழ்வு சிறக்கும்.
6. சேர்ந்துப் படுத்தால்கூட...உடல் நலமோ அல்லது மன நலமோ குன்றிய காலத்திலும்கூட கனிவாகப் பேசுதல், சிரித்த முகத்தோடு செயல்படுதல், அன்புகொண்டு அரவணைத்தல்,
நெருங்கிப் படுத்து இதமான உணர்வுகளை ஊட்டுதல் போன்ற செயல்கள் மிக முக்கியமான இயற்கை மருத்துவமாக அமையும்.
பல சமயங்களில் பெரும்பாலான இளம் வயதினர் கோபத்துக்கு இடம் கொடுத்து உடல் உறவு எனும் மென்மையான உணர்வு தலைதூக்க விடாமல் செய்து விடுகின்றனர்.
நாளடைவில் நோய்கள் தலை தூக்கும். கோபம் குடியைக் கெடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பல சமயங்களில் பெரும்பாலான இளம் வயதினர் கோபத்துக்கு இடம் கொடுத்து உடல் உறவு எனும் மென்மையான உணர்வு தலைதூக்க விடாமல் செய்து விடுகின்றனர்.
நாளடைவில் நோய்கள் தலை தூக்கும். கோபம் குடியைக் கெடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
7. ஆர்வம் குறைவது ஏன்?வயது ஆக, ஆக இன்ப உணர்வுகளின் தரம், வேகம், விறுவிறுப்பு, அளவு, அற்புதங்கள் நிகழ்த்தும் தன்மை அனைத்தும் மாறுபடும். இதற்கு தம்பதியினரின் மனப்பாங்கே காரணம்.
குடும்பக் கவலைகள், கூடிவரும் பொறுப்புகள், வாழ்க்கைச் சுமைகளின் அழுத்தங்கள், பிள்ளைகளின் வருங்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் இளமைக்கால வேகம் குறைந்து உல்லாச உணர்வுகள் ஊக்கம் பெறுவதில்லை.
விளைவு, ஊட்டச் சத்துகளும், ரத்த ஓட்டமும், பிராண வாயுவும் குறைவாகக் கிடைத்து, செயல் திறன் குறையும்.
8. இயற்கை அளித்த மாமருந்துபொன்னால் ஆன ஆபரணங்களைப் பார்த்தும் அணிந்தும் மனித இனம் சந்தோஷப்படுகிறது. பொன்னும் பொருளும் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவை இல்லை.
8. இயற்கை அளித்த மாமருந்துபொன்னால் ஆன ஆபரணங்களைப் பார்த்தும் அணிந்தும் மனித இனம் சந்தோஷப்படுகிறது. பொன்னும் பொருளும் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவை இல்லை.
ஆனால், உடலின் தேவையைத் தரவும், உள்ளத்தின் தாகத்தைத் தணிக்கவும், மனதின் அழுத்தங்களைக் குறைக்கவும், நோய் இன்றி உடல் நலம் காக்கவும் தாம்பத்ய உறவு அடிப்படை. இது இயற்கை அளித்த நலம் தரும் மாமருந்து.
9. தொடரும்மரபுச் சங்கிலி மரபுச் சங்கிலியில் ஒரு இணைப்பு மரணத்தால் துண்டிக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் புதியதாய் பிறக்கும் குழந்தை, மரபுச் சங்கிலியில் புதியதாய் ஒரு இணைப்பை ஏற்படுத்தி மகிழ்ச்சிக்கு வித்திடுகிறது.
இதற்கு வித்திட்டது இல்வாழ்வின் உடல் உறவு. மரபு என்பதில் பல பண்புகள் அடங்கியுள்ளன. மரபை ஒட்டிய பல பாணிகள், தோற்றத்திலும் நோக்கிலும் செயலிலும் புதிதாகப் பிறந்த சிசுவின் பல வளர்ச்சிக் கட்டங்களில் வெளிப்படுகின்றன.
10. உறவு மறுக்கப்படுதல் கூடாது. இல்வாழ்க்கையின் அடிப்படையான உடல் உறவை தெரிந்தோ, தெரியாமலோ, காரணத்துடனோ, காரணமின்றியோ தம்பதியர் பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.
இந்த அலட்சியம் பல நேரங்களில் குடும்பத்தின் அடித்தளத்தையே அசைத்து விடுகிறது.
10. உறவு மறுக்கப்படுதல் கூடாது. இல்வாழ்க்கையின் அடிப்படையான உடல் உறவை தெரிந்தோ, தெரியாமலோ, காரணத்துடனோ, காரணமின்றியோ தம்பதியர் பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.
இந்த அலட்சியம் பல நேரங்களில் குடும்பத்தின் அடித்தளத்தையே அசைத்து விடுகிறது.
உறவு மறக்கப்படும் அல்லது மறுக்கப்படும் இல்வாழ்க்கை கொடு நரகமாகிவிடும். இத்தகைய நிலையில் கணவன்-மனைவியிடையே கசப்புணர்வு மேலோங்கும்.