துணிகளில் படிந்த கடினமான கறைகளை நீக்க !

2 minute read
பொதுவாக கறைகள் துணிகளில் படிந்து, அவற்றை நீக்க வேண்டுமென்று நினைத் தாலே கோபமாக இருக்கும். அதிலும் ஒரு சில கறைகள் துணிகளில் படிந்தால், அவற் றை நீக்குவது மிகவும் சிரமமான ஒரு செய ல். 
http://tamil.boldsky.com/img/2013/04/10-washingclothes.jpg

கறைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மென்மையானவை மற்றொன்று கடினமானவை. மென்மையான கறைகளை எளிதில் போக்கிவிடலாம். 

ஆனால் கடினமான கறைகளை நீக்குவது தான் இருப்பதிலேயே கஷ்டமா னது. குறிப்பாக கடினமான கறை களில் மை, இரத்தம், காபி, கிரீஸ் மற்றும் துரு முதலா னவை அடங்கும். 

இவற்றி ல் ஒன்று அல்லது அத ற்கு மேற்பட்ட கறையை நீக்கு வதற்கான வழிமுறையை கையா ளும் போது ஒரு கறையை நீக்குவதற்கான வழிமுறை மற்ற கறையை நீக்காது என்பதனை மனதில் கொள்ள வேண்டும். 

சரி, இப்போது எ ந்த கறைகளை எப்படி நீக்கினால் எளிதில் போய்வி டும் என்ப தைப் பார்ப்போமா!


மை கறை 

1) ஹேர் ஸ்ப்ரே கொண்டு கறை உள்ள இடத்தில் தெளிக்க வேண்டும். 

 2) பின் 5 நிமிடம் கழித்து, அதனை நன்கு துவைத்து உலர்த்த வேண்டும். 

3) துணியை உலர்த்தியில் போடும் முன் பதாக கறை நன்றாக நீக்கப்பட்டுவிட்ட தா என்று பார்க்க வேண்டும். கறை சிறி து நீக்கப்படாமல் இருந்தாலும், உலர்த் தியின் வெப்பத்திற்கு கறையானது துணி யில் நிரந்தரமாக படிந்து விடும். 

 

இரத்த கறை 

 1) இரத்தக் கறை துணியில் படிந்தவுடன் உடனடியாக துணியை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். பின்பு வினிகரை ஒரு சுத்தமான துணி யில் நனைத்து, ஒத்தடம் கொடுக்கவு ம். (தேய்க்கக்கூடாது) 

2) இரத்தம் போகும் வரை ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்கவும் 

 3) பின்பு வினிகர் வாசனை போகும் வரை நீரில் அலசி எடுக்கவும். 

 

காபி கறை 

1) போராக்ஸ் (Borax) மற்றும் நீர் சேர்த் து ஒரு கலவையை உருவாக்கவும். 

2)இந்த கலவையை காபி கறை படிந்த இடத்தில் தடவி 30 நிமிடம் வரை வைத் திருக்கவும். 

3) நீரில் நன்கு அலசிய பிறகு வழக்கம் போல் சலவை செய்யவும்.

எண்ணெய் பசை/க்ரீஸ் கறை 

1) அழுக்கு நீக்கும் எரிசாராய கரைசலை (Rubbing Alcohol) கறை படிந்த இடத்தில் ஒரு சுத்தமான துணியில் நனைத்து வைக்கவு ம். (தேய்க்க வேண்டாம்) 

2) கறை நீங்கும் வரை தொடர்ச் சியாக, அதன் மேல் வைத்திரு க்க வேண்டும். 

3) பின்னர் பாத்திரம் கழுவும் டிட ர்ஜெண்டை இதன் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் துவைத்து வழக்கம் போல சலவை செய்யவும். 
 

துரு கறை 

1) டார்டார் க்ரீமை (cream of tartar) கறையின் மீது வைத்து கசக்கவும். பிறகு டார்டார் க்ரீம் கறையின் மீது இருக்குமாறு வைத்து துணியை மடிக்க வேண்டும்.. 

 2) ஒரு பாத்திரத்திலோ அல்லது தொட்டி யிலோ சுடு நீர் நிரப்பி துணியை அதில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

3) பின்னர் நன்றாக அலசி, வழக்கம் போ ல் துணியை சலவை செய்யவும்.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings