மோட்டார் பைக் பின் சீட்டில் பெண்கள் அமர தடை !

இந்தோனேசியாவில் உள்ள ஒரு மாகாண அரசு, பெண்கள் மோட்டார் பைக்கின் பின் சீட்டில் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து பயணம் செய்வதை தடை செய்துள்ளது.
 

இஸ்லாமிய ஷாரியா சட்டத்தில், மோட்டார் பைக்கின் பின்சீட்டில் பெண்கள் அமர்ந்து செல்வது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விஷயம் என, மாகாண அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில், ஒரேயொரு மாகாணத்தில் தான் இஸ்லாமிய ஷாரியா சட்டம் அமலில் உள்ளது. 

ஆச்சே மாகாணத்தில் இந்த உத்தரவு, அனைத்து அரசு அதிகாரிகள், மற்றும் காவல் துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு நடைமுறைப் படுத்தப்படும் இந்த உத்தரவு, 30 நாட்களின் பின் நிரந்தர சட்டமாக்கப்படும். 

மாகாண மேயர் சுவாய்தி யாஹ்யா, “மோட்டார் பைக்கின் பின்சீட்டில் பெண்கள் அமர்ந்து செல்வது இஸ்லாமிய ஷாரியா சட்டத்தில் அனுமதிக்கப்பட வில்லை. ஒரு பெண், பெண் போல அமரவேண்டும் என்கிறது ஷாரியா சட்டம். 

 

மோட்டார் பைக்கின் பின்சீட்டில் பெண்கள் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து செல்லும் போது, ஒரு பெண், ஆண்போல அமர்ந்து செல்கிறார். அடக்க ஒடுக்கமாக இல்லை. 

அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது” என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்தச் சட்டம், மற்றைய மாகாணங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி யுள்ளது. இஸ்லாமிய அமைப்புகளே, இந்த உத்தரவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings