எச்.ஐ.வி முழுமையாக குணமாக்குவது சாத்தியம்.. ஆராய்ச்சியில் !

எச்.ஐ.வி வைரஸை முழுமையாக குணப்படுத்தக் கூடிய சாத்தியப் பாட்டிற்கான முதல் படியை தாங்கள் எட்டியி ருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்தி ருக்கிறார்கள். 
 



எச்.ஐ.வி வைரஸானது மனித உடலுக்குள் புகுந்ததும் உடனடியாக தாக்குவ தில்லை. மனித உடலில் சில செல்க ளுக்குள் புகுந்து கொண்டு செயற்படாமல் மறைந்து ஒளிந்து கொள்கிறது. 

இப்படியான நிலையில் இந்த எச் ஐ வி வைரஸானது பல ஆண்டுகள் மறைவாக இருக்க முடியும். இப்படி செல்களுக்குள் புகுந்து கொண்ட நிலையில் இருக்கும் எச்.ஐ.வி வைரஸை கண்டு பிடிக்கவே முடியாது. 

குறிப்பாக மனித உடலின் நோய் எதிர்ப்பு செல்களாலோ, எச்.ஐ.வி தொற்றுக்கு எதிரான ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்து களாலோ இப்படியான வைரஸை கண்டுபிடித்து தாக்க முடியாது. 

மேலும், இப்படி மறைந்திருக்கும் எச்.ஐ.வி வைரஸ்கள் திடீரென்று ஒருநாள் தான் ஒளிந்து கொண்டிருக்கும் செல்லிலிருந்து வெளியே வந்து மனிதனை தாக்கத்து வங்கும் நிலை இருப்பதால் தான்.

இன்றுவரை எச்.ஐ.வி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலைமையை மாற்ற முடியும் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். 

மறைந்திருக்கும் எச்.ஐ.வி வைரஸை பலவந்தமாக வெளியே கொண்டு வந்து, அதை தாக்கி அழிக்க முடியும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் நேச்சர் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் தெரிவித்திருக் கிறார்கள். 



புற்று நோய்க்கான மருந்தாக பயன் படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று ஒரினோஸ்டாட். இந்த மருந்தை எச் ஐ வி தொற்றுக்கு உள்ளானவர் களுக்கு கொடுப்பதன் மூலம், 

செல்களுக்குள் மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ் பலவந்தமாக அந்த செல்களில் இருந்து வெளியேற்றப் படுகிறது. 

இப்படி வெளியே வந்த செல்களை ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்துகள் தாக்கி அழித்து விடுகின்றன. மறைந்திருக்கும் எச்.ஐ.வி வைரஸை குறி வைத்து தாக்கவும், காலப்போக்கில் அழிக்கவும் கூடிய வழிகளை நாம் கண்டறியத் துவங்கி யிருக்கிறோம். 

இப்படி ஒரு மனிதனின் உடலில் மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ்கள் அனைத்தையும் நாம் அழித்து விட்டோமானால், 

நாம் அந்த நபரை எச்.ஐ.வி வைரஸ் தொற்றி லிருந்து முழுமையாக குணப்படுத்தி விட்டோம் என்று கூறமுடியும் என்கிறார் டேவிட் மார்கோலிஸ்.

உலகம் முழுவதும் எச் ஐ வி வைரஸால் பாதிக்க ப்பட்ட லட்சக் கணக்கான வர்களுக்கு இது மிகப்பெரிய நம்பிக்கை யளிக்கும் செய்தியாக இருக்கும் என தெரிகிறது.
Tags:
Privacy and cookie settings