கூகுள் கூகுள் பண்ணிப் பாருங்கள் !

ணவு, உடை, இருப்பிடம் என்ற அத்தியாவசியத் தேவைகளின் வரிசையில் இன்று இன்டர்நெட்டையும் சேர்க்க வேண்டும் எனுமளவுக்கு இருக்கிறது இணையத்தின் அசுர வளர்ச்சி. 
கூகுள் கூகுள் பண்ணிப் பாருங்கள் !
அதில், இன்டர்நெட்டை முதன் முதலாகப் பயன்படுத்தும் பள்ளி மாணவர்களில் இருந்து, இன்டர்நெட் மூலமாக கோடிகளில் சம்பாதிப்பவர்கள் வரை அனைவரும் நாடுவது… 

கூகுள் சேவையை. விரிந்துகொண்டே போகும் அந்தச் சேவைகளின் பட்டியலும், பயன்பாடும் இங்கே..!

கூகுள் சேர்ச்… கம்ப்ளீட் சேர்ச்!

‘கூகுள் சேர்ச்’ என்னும் தேடுபொறியில் குறிப்பிட்ட வார்த்தைக்கான அர்த்தம் தொடங்கி, புகைப்படங்கள், வீடியோக்கள், புத்தகங்கள் என இந்த உலகில் உள்ள எந்த விஷயம் குறித்தும் நாம் தகவல்கள் பெறலாம். 

 கூகுள் கூகுள் பண்ணிப் பாருங்கள் !
இதற்குப் போட்டியாக எத்தனையோ தேடுபொறிகள் களத்தில் இறங்கினாலும், அவை யெல்லாம் கூகுள் அளவுக்கு கவரவில்லை என்பது, 

கூகுளின் தரத்தையும், வேகத்தையும் மேலும் நிரூபிக்கிறது. www.google.co.in செல்லுங்கள்… கிடைக்காத தகவல்களே இல்லை.

கூகுள் அக்கவுன்ட்… நொடியில் தகவல் பரிமாற்றம்!

தனிநபர் தொடங்கி, பெரிய பெரிய நிறுவனங்கள் வரை தகவல் பரிமாற்றத்துக்கு இ-மெயிலையே இன்றைக்குப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். 

கூகுளின் இ-மெயில் சேவையான ஜி-மெயிலில் ஒரு அக்கவுன்ட் தொடங்கினால் போதும்… 

இ-மெயில் மட்டுமல்லாமல் கூகுளின் அனைத்து வகையான சேவைகளையும் அந்த அக்கவுன்ட்டைக் கொண்டே பெறலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 

https://accounts.google.com  என்ற பக்கத்துக்குச் சென்று நீங்களும் தொடங்கலாம் புது அக்கவுன்ட்.

மொழிகள் கடக்க வைக்கும் கூகுள் டிரான்ஸ்லேட்டர்!

எந்த மொழியும் தெரியவில்லை என்ற கவலையில்லை… கூகுள் டிரான்ஸ்லேட்டர் இருக்கும் போது. 

உங்களுக்குத் தெரியாத ஒரு மொழியின் வார்த்தையையோ, வாக்கியத்தையோ தெரிந்த மொழியில் மொழிப்பெயர்ப்பது தொடங்கி, 

 
ஒரு மொழியின் எந்தவொரு வார்த்தைக்கும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் அர்த்தம் அறிவது வரை ‘கூகுள் டிரான்ஸ்லேட்டர்’ சேவை விரிகிறது. 

https://translate.google.co.in/  என்ற பக்கத்தில், தரிசிக்கலாம் மொழிகளின் உலகத்தை.

சுறுசுறு கூகுள் குரோம்!

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோஸிலா ஃபயர்ஃபாக்ஸ் உள்ளிட்ட எத்தனையோ வெப் பிரவுஸர்கள் இருந்தாலும், இன்டர்நெட்வாசிகள் வசதியாகவும், 

சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஓட்டளிப்பது, ‘கூகுள் குரோம்’ வெப் பிரவுஸரை. download free google chrome  என்ற பக்கத்துக்குச் சென்று, இதை இலவசமாக டவுன்லோடு செய்து, கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

ஹாட் ஹிட்… யூடியூப்!
வீடியோ, பாடல் என்று பொழுதைக் கழிக்கும் இன்டர்நெட் வாசிகளின் வேடந்தாங்கல், ‘யூடியூப்’! தங்களுக்குத் தேவையான எந்தப் பாடல், வீடியோவையும் இதில் தேடிப் பெறலாம், டவுன்லோடு செய்துகொள்ளலாம். 

மேலும் ஒருவர் தனது வீடியோவை இந்த சேவையின் மூலம் அப்லோடு செய்து உலகம் முழுக்கப் பார்க்கும்படியும் செய்யலாம். 

இதனால், தங்கள் திறமையையை வெளிக்காட்ட தளமில்லாது தவித்த பலருக்கும் யூடியூப் வரமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings