முதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி !

ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங்: கால்களை நன்றாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு கை விரல்களால் கால் விரல்களை தொடவும். 


இந்த நிலையில் கால் மூட்டுகளை உயர்த்தக்கூடாது. இதே நிலையில் 15 வினாடிகள் இருக்க வேண்டும். இந்த பயிற்சியை அவசியம் செய்ய வேண்டும்.

இடுப்புப் பகுதியை வலுவூட்டும் பயிற்சி:

நேராக நிற்கவும். ஒரு காலை மட்டும் லேசாக உயர்த்தவும். இந்த நிலையில் அதிகமாக ஒரே பக்கத்தில் சாய்ந்துவிடக் கூடாது. 

ஒற்றைக்கால் பேலன்ஸில் நேராக நிற்க வேண்டும். இதே நிலையில் ஒரு நிமிடம் வரை நிற்க முயற்சி செய்யவும். இதே பயிற்சியை மற்றொரு காலிலும் செய்யவும்.

தூங்குவது எப்படி?

உடல்பருமனானவர்கள், தூங்கும்போது முதுகு வலிப் பிரச்னையால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். மிகவும் மென்மையான,

படுத்தால் குழிவிழும்படி உள்ள மெத்தைகளில் படுக்கக் கூடாது. 

மெத்தை அல்லது தரையில் படுக்கும்போது, ஒரு தலையணை தலைக்கும்

மற்றொரு தலையணையை மூட்டு பகுதியிலும் வைத்துத் தூங்கவேண்டும். இதனால், முதுகு வளையாது. முதுகு வலியும் ஏற்படாது.

முதுகு வலியில் இருந்து மாணவர்கள் தப்பிக்க...

மாணவர்கள், கரும்பலகையை அண்ணாந்து பார்க்கும்படி இல்லாமல், தங்களது உயரத்துக்கு ஏற்ற தூரத்தில் அமர்ந்து, பாடங்களைக் கவனிக்க வேண்டும்.


தினமும் மாணவர்கள் அதிக அளவுப் புத்தக மூட்டையைத் முதுகில் சுமக்காமல், குறைந்த அளவு நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும்.

கணினி, லேப்டாப் பயன்படுத்துவதன் மூலம் புத்தகச் சுமையைக் குறைக்கலாம். வீட்டுக்கு அருகில் நடந்து செல்லும் தூரத்தில் பள்ளிகளில் சேர்ப்பது, பெற்றோர், மாணவர்கள் இருவருக்கும் நல்லது.

உணவில் தேவை அக்கறை:

தினமும் சமச்சீரான உணவு அவசியம். எடைகுறைந்தவர்கள் தினமும் பால், முட்டை, கீரை போன்ற புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
எலும்புக்கு கால்சியம் அவசியம். வேலைக்குச் செல்பவர்கள், பெண்கள் தினமும் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Tags:
Privacy and cookie settings