மன நோயை குணப்படுத்தும் மீனெண்ணெய் மாத்திரைகள் !

மீன் எண்ணெய்யில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மன நோய்களுக்கு மருந்தாவ தாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக் கின்றன.
 மன நோயை குணப்படுத்தும் மீனெண்ணெய் மாத்திரைகள்


மீனெண்ணெய் மாத்திரைகளை 12 வார காலத்திற்கு கொடுத்ததில் பெரும் பாலானவர் களுக்கு

மனப் பாதிப்புகள் மற்றும் மன நோய்கள் தடுக்கப்படுவது உறுதி யாகியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவ தற்காக மக்களிடையே பரவலாக மீனெண்ணெய் மாத்திரைகள் உண்ணப்பட்டு வருகின்றன.

இவற்றில் உள்ள ஆல்பா லீனோலிக் போன்ற அமிலங்கள் மனித உடம்பின் செல் சவ்வுகளில் காணப் படுகின்றன.

இவை ஹோர்மோன் கள் சுரக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இயற்கை வைத்தி யத்திற்காக மீனெண்ணெய் மாத்திரை களை தேர்வு செய்வது தெளிவாகியுள்ளது.
 


ஆண்டு தோறும் அமெரிக்கர்கள் 120 கோடி டாலர்களை செலவழிப்ப தாக அந்த கருத்துக் கணிப்பில் மேலும் தெளிவாகிறது.

அவுஸ்திரேலியா வின் மெல்பர்ன் பல்கலைக் கழக பேராசிரியர் பால் ஆம்னிகர் இது சம்பந்தமாக ஓர் ஆய்வினை மேற்கொண்டார்.

இதில் 13 முதல் 25 வயதிற் குட்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் பட்டனர்.

மொத்தம் 81 பேரில் 41 பேருக்கு மீனெண்ணெய்யும், மீதி 40 பேருக்கு சாதரண மன நல சிகிச்சையும் கொடுக்கப் பட்டது.

மீனெண்ணெய் கொடுக்கப்பட்ட 41 பேரில் 39 பேருக்கு மன ஆரோக்கிய த்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

சாதாரண சிகிச்சை அளிக்கப் பட்டவர்களில் 29 பேருக்கு மட்டுமே மன ஆரோக்கிய த்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.
Tags:
Privacy and cookie settings