ஒரு குறிப்பிட்ட வகை மாத்திரையை, உணவுப் பொருட்களுடன் கலந்து கொடுத்து பெண்களை பாலியல் வன்புண ர்வுக்கு உட்படுத் துகிறார்கள் என்கிற தகவல் ‘வாட்ஸ் அப்’பில் பரவிக் கொண்டி ருக்கிறது.
இதைப் பற்றி தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர், டாக்டர். கீதாலட்சுமியிடம் கேட்டபோது, ‘‘அந்த மாத்திரை ஒரு வகையான தூக்க மாத்திரை.
இதை ஆல்கஹால், குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் என்று எதிலும் கலந்து கொடுக்கலாம். கண்டுபிடிக்க முடியாது. காரணம்… வாசனை, நிறம், சுவை என எதுவும் இந்த மாத்திரைக்கு இருக்காது; சுலபமாகக் கரையவும் கூடியது.
உட்கொண்ட பின், சம்பந்தப்பட்டவரை குறைந்தது 8 மணி நேரத்துக்கு மயக்கத்தில் வைத்திருக்கக் கூடியது இந்த மாத்திரை. தென் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள ஒரு நிறுவனம்தான் இதன் தயாரிப்பாளர்.
அந்நாடுகளில், அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாகவும், தூக்கமில்லாமல் தவிக்கும் வயோதிகர்களுக்கும் இம்மாத்திரை பயன்படுத்தப் படுகிறது.
இந்தியாவில் இந்த மாத்திரை விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட வில்லை.
இந்த மாத்திரையை குற்றச் செயல்களுக்காக பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத் தான், மற்ற உணவுப் பொருட்களில் கலந்து கொடுக்க இயலாத வகையில், அடர் நிறத்துடன் தயாரிக்கப்படுகிறது.
ஆனால், அடர் நிற குளிர்பானங்களில் கலக்கும்போது, கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இன்னொரு வழியாக, அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் ஊசி மூலமும் செலுத்த முடியும்.
இப்படிச் செலுத்தும்போது, கலர்லெஸ் மற்றும் வெளிர் நிற குளிர் பானங்கள் தவிர்த்து, அடர் நிற குளிர் பானங்களில் கலக்கிறார்கள்” என்று சொன்ன கீதாலட்சுமி,
”பெண்கள் வெளியிடங்களில் தங்களுக்குத் தரப்படும் தண்ணீர் முதல் குளிர் பானங்கள், உணவு, ஸ்நாக்ஸ் என்று அனைத்தையும் சந்தேகப்படுவது நல்லது.
”பெண்கள் வெளியிடங்களில் தங்களுக்குத் தரப்படும் தண்ணீர் முதல் குளிர் பானங்கள், உணவு, ஸ்நாக்ஸ் என்று அனைத்தையும் சந்தேகப்படுவது நல்லது.
முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போதே, இவற்றையெல்லாம் எடுத்துச் செல்லலாம்!’’ என்று அறிவுரையும் தந்தார்.