இதயத்தை கிழித்து பரிசாக கொடுத்த காதலன் !

ஒரு ஊரில் ஒரு ஆணும் பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்கள். காதலிக்கும் போது, 
இதயத்தை கிழித்து பரிசாக கொடுத்த காதலன் !
அந்த பெண் அவனிடம் அன்பே என் இதயம் உன்னிடத்தில் தான் இருக்கிறது என்று சொல்லாத நாட்களே இல்லை.

இயற்கையான மரங்கள், செடிகள் மற்றும் பறவைகள் அருவி பாயும் சத்தங்கள் கேட்கும் 
மிகவும் அழகான இடம் தான் இவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடமாக இருந்தது.

இதே போல் காலங்கள் கடந்தன. இந்நிலையில், இவர்கள் காதலுக்கு பேரிடி ஒன்று விழுந்தது. 

இருவரும் வெவ்வேறு சமயத்தினர் என்பதால் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வசதியான நல்ல மாப்பிள்ளையாக பார்த்து விட்டார்கள்.

அந்த பெண்ணை அவளின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மத த்தையும் வாங்கி  விட்டார்கள். 

பிறகு அவளுக்கு நிச்சயமும் ஆகிவிட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவள் தன்னுடைய 

அன்பான காதலனுக்கு போன் செய்து, ப்ளீஸ் என்னை மறந்து விடு என்று கூறினாள்.
இதற்கு , காதலன் உன்னை எப்படி டா மறக்க முடியும் என் இதயமே  நீதானே…உன்னை மறப்பதும் நான் இறப்பதும் ஒன்று தானடி…என்று கெஞ்சி அழுதான்.

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன்?

ஆனால் அவள் அதைப் பொருட் படுத்தாமல் தயவு செய்து என்னை மறக்க முயற்சி செய் எனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

இந்நிலையில், அவளின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்க அந்த காதலி தன்னுடைய காதலனையும், 

அவனின் நினைவு களையும் மறந்து கல்யாணக் கலையுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

ஆனால், அந்த திருமண பெண்ணின் காதலனோ, அன்பே என் இதயம் உன்னிடத்தில் என்று கூறிய 

வார்த்தைகளை நினைத்து நினைத்து மனம் உருகி தினம் தினம் வருந்திக் கொண்டிருந்தான்.

காதலியின் திருமணநாள் வந்தது.. அந்த திருமணவிழாவிற்கு வந்த அனைவரும் நிறைய பரிசுப் பொருட்களை கொடுத்தார்கள்.

அந்த பரிசுப் பொருட்களில் ஒரு பரிசு பொருளைப் பார்த்ததும் அந்த காதலி அதிர்ந்து போனாள்.

எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !

ஏனென்றால், அந்த பரிசுப் பொருளானது அவளின் காதலனிடம் இருந்து வந்திருந்தது. 
உடனே அவள் வரவேற்பு விழா முடிந்ததும் மணமகள் அறைக்கு விரைந்துச் சென்று அந்த பரிசு பொருளை பிரித்து பார்க்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்தாள்.

வரவேற்பு விழா முடிந்தது, யாரிடமும் கூறாமல் வேகமாக மனமகள் அறைக்குள் ஓடி பரிசுப் பொருளைப் பார்த்தால்.

ஆனால், அதைப் பிரித்துப் பார்ப்பதற்க்கு மாறாக தன்னுடன் அணைத்துக் கொண்டு அதற்கு ஆயிரக் கணக்கில் முத்தங்கள் கொடுத்தாள்.

பின் அவளின் மனதில் தன்னுடைய காதலனைப் பற்றிய பழைய நினைவுகள் கண்களில் கண்ணீராக வழிந்தோடியது. 

அன்று இரவு முழுவதும் அவள் அழுது கொண்டே இருந்ததில் சூரியன் உதித்து விடியலும் பிறந்து விட்டது.

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

இனி அவள் காதலனை நினைத்து அழுதால் ஒரு பயனும் இல்லை என்று அவளே தன்னுடைய மனதை சமதானப் படுத்திக் கொண்டாள்.

இந்த பரிசு பொருளை பிரித்தால் அவனின் நினைவுகள் தன்னைக் கொன்று விடும் என்று அந்த பரிசை பார்க்காமல் பத்திரமாக வைத்து இருந்தாள். 
ஒரு நாள் திடீரென்று அந்த பரிசுப் பொருள் காணமல் போனது. அதைப்பற்றி அவள் கவலைப் படவில்லை.

ஆனால், கடைசிவரை அவளுக்கு தெரிய வில்லை அந்த பரிசுப் பொருளில் இருந்தது அவளுடைய காதலலின் இதயம் என்று…
Tags:
Privacy and cookie settings