இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும், முன்னணி சமூக வலைத் தளமான பேஸ்புக்கும் விரைவில் இணைந்து பணியாற்றக் காத்திருக் கின்றன.
இன்னும் இரு மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் இடம் பெறவுள்ள தேர்தலின் போது போலியான தகவல்கள் பரப்பப் படுவதை தடுக்கவே இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப் படவுள்ளது.
கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது அதிகள அளவில் போலியான தகவல்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இதற்கு பிரதானமாக பேஸ்புக் வலைத்தளமே பயன் படுத்தப் பட்டிருந்தது.
இதன் தாக்கத்தை உணர்ந்து கொண்ட பேஸ்புக் நிறுவனம் அமெரிக்கா,
ஜேர்மனி போன்ற நாடுகளில் போலியான தகவல்கள் பரப்பப் படுவதை தவிர்ப் பதற்கான வசதிகளை அறிமுகம் செய்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே கூகுள் நிறுவன த்துடன் இணைந்து CrosssCheck எனும் புதிய அடித்தளம் ஒன்றின் ஊடாக போலியான தகவல்கள் பரப்பப் படுவதை தடுக்க முடிவு செய்துள்ளது.
CrosssCheck ஆனது இம்மாதம் 27ம் திகதி முதல் நடை முறைப் படுத்தப் படவுள்ளது.