கார் ரேசை தடுத்த இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் | Car race effected threat Inspector !

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஞாயிறன்று சட்ட விரோத மாக கார் ரேஸ் நடத்திய 10 பேரை கைது செய்து அவர்களின் விலை உயர்ந்த சொசுகு கார்களை பறிமுதல் செய்தனர். 





மேல்மட்ட அழுத்தம் காரண மாக கார் பந்தையத்தில் ஈடுபட்ட 9 பேரை சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித் துள்ளனர். 


வார விடுமுறை நாட்களில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை களில் கார், பைக் ரேஸ்கள் நடந்து வருகின்றன. ஆபத்தான இந்த பந்தையங் களினால் விபத்துக்கள் ஏற்பட்டு பலரது உயிர் பறி போயுள்ளது.

பைக் பந்தையம் நடத்த காவல் துறை தடை விதித்து ள்ளது. தடையை மீறி சில வசதி படைத்த இளைஞர்கள் கார் பந்தைய ங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் துறை எச்சரிக்கை

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பந்தயத்தில் ஈடுப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜ் உத்தர விட்டார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த செயல்கள் சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் தொடங்கி யுள்ளது.

சொகுசு கார் ரேஸ்

ஞாயிறன்று கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை அடுத்த உத்தண்டி அருகே பென்ஸ், லம்போஹினி, பி.எம்.டபிள்யூ போன்ற கோடிக் கணக்கான மதிப்புள்ள 15 சொகுசுக் கார்கள் பந்தயத்தில் ஈடுப்பட்டது.

சீறிப்பாய்ந்த கார்கள்

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்மந்தப் பட்ட கார்களை பிடிப்பதற் காக சோதனை யில் ஈடுபட்டனர். உத்தண்டி சோதனைச் சாவடியில் 10கார்கள் மட்டுமே பிடிப் பட்டது. 





மீதமுள்ள 5கார்கள் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இதனை யடுத்து பிடிப்பட்ட கார்கள் கானாத்தூர் காவல் நிலையத் திற்கு கொண்டு செல்லப் பட்டன.


போலீசுக்கு மிரட்டல்

பந்தைய த்தில் ஈடுபட்ட வர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திக் கொண் டிருக்கும் போது சொகுசுக் கார் ஒன்று விசாரணை செய்துக் கொண் டிருந்த 

போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்திர ராஜனின் காலில் ஏற்றியபடி சென்னையை நோக்கி வேகமாக சென்றதாக தெரிகிறது.

பந்தையம் நடத்தியது யார்?

இதை யடுத்து கானத்தூர் காவல் நிலைய த்துக்கு அழைத்து வந்து கார் உரிமையா ளர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். 

இதில் கார் ரேஸ் நடத்தி யவர்கள் பெயர் ஸ்ரீசாத், விக்னேஸ்வரன், கிஷால், சங்கர், பிரசன்னா, ராகவேந்திரன், கரன், ராஜகோபால், எஸ்காணி என்பது தெரிய வந்துள்ளது. 

இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பெரும் புள்ளிகளின் மகன்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்

இந்நிலையில் கார் உரிமை யாளர்களிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது அவர்கள் உயர் அதிகாரி களிடம் பேசி அங்கிருந்த காவல் துறையினரு க்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப் படுகிறது. 

கார் ரேஸை தடுத்து நிறுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டரு க்கு மிரட்டல் விடுத் துள்ளனர்.

ஜாமீனின் விடுவிப்பு

பந்தைய த்தில் ஈடுபட்ட 10 பேர் மீதும் வேகமாக கார் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. 





உயர்மட்ட வற்புறுத்தல் காரணமாக அனைவரும் சொந்த ஜாமீனில் விடு விக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.


வரிசையில் நிற்கும் கார்கள்

இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றிய ராகவ கிருஷ்ணன் என்பவரை சிறைக்கு அனுப்ப போலீஸ் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது. 

பந்தையத்திற்கு பயன்படுத்திய 10 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலைய வாசலில் நிறுத்தப் பட்டுள்ளன.
Tags:
Privacy and cookie settings