ஜாதியை முன்னிறுத்தி பேசுவதா? விஜயகாந்த் கண்டனம் !

0 minute read
சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மரபுகளை மீறி நடைபெற்ற செயல் களாகவே உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஜாதியை முன்னிறுத்தி பேசுவதா? விஜயகாந்த் கண்டனம் !
இது பற்றி அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: அதிமுகவும், திமுகவும் தனது நாடகங் களை சட்ட சபையில் அரங்கேற்றி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

சபாநாயகர் தன்னுடைய ஜாதியை முன்னிறுத்தி பேசியது மிகவும் கண்டனத்துக் குரியது. எனவே அவர் சபையில் அனைவருக்கும் பொதுவாகத் தான் நடந்துக் கொள்ள வேண்டும்.

மேலும், கட்சிகளுக்கும் ஜாதிபேதங் களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை யாக செயல் பட்டிருக்க வேண்டிய சபாநாயகர் சாதியை முன்னிறுத்தி பேசியது மிகவும் வருத்த மளிக்ககூடிய செயலாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings