பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாடு வதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித் துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப் படுகிறது.
பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட தடை !இதே போல் பாகிஸ்தானி லும் காதலர் தினத்தை கொண்டாடி வந்தனர். இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற த்தில் அப்துல் வாகித் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.‘‘காதலர் தினம் இஸ்லாமிய பாரம்பரி யத்துக்கு எதிரானது. எனவே காதலர் தின கொண்டாட்ட த்துக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியி ருந்தார்.
இந்த மனு நீதிமன்றத்தில் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பாகிஸ்தானில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப் படுகிறது என்று உத்தர விட்டது.
காதலர் தின கொண்டாட் டத்தை நிறுத்து வதற்கான அனைத்து நடவடிக்கை களையும் அரசு உடனடி யாக எடுக்க வேண்டும்.
பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட தடை !இந்த உத்தரவை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட் டுள்ளார். அரசு மட்டுமின்றி ஊடகங்கள்,
பத்திரிகை களிலும் காதலர் தின கொண்டாட் டத்தை ஊக்கு விக்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறி யுள்ளார்.