முதல்வர் நாற்காலியை நெருங்கினால் மொத்த அதிகாரமும் போகும்: ஓ.பி.எஸ் | Chair the authority of the chief minister will go towards: opies !

முதல்வர் நாற்காலியை நெருங்கினால் மொத்த அதிகாரமும் பறிபோய்விடும் என்று சசிகலாவை முன்கூட்டியே பன்னீர்செல்வம் எச்சரித் துள்ளார். ஆனால் முதல்வர் பதவி ஒன்றே குறிக்கோள் என்று நகர்ந்த காரணத்தால்,





இன்று சசிகலா இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடக்கும்போதே, அம்மா சமாதிக்கு சென்று வருகிறேன் என்று சசிகலாவிடம் சொல்லி இருக்கிறார் பன்னீர்செல்வம்.


ஆனால், கூட்டம் முடிந்ததும் உங்கள் தாய்க்கு அஞ்சலி செலுத்துங்கள் என்று கூறி, பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி அமர வைத்துவிட்டார் சசிகலா

அன்றைய தினமே, ராஜினாமாக் கடிதம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் திட்டத்தில் இருந்தார் பன்னீர்செல்வம்.

அது முடியாமல் போகவே, அடுத்த இரண்டு நாட்களும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்த அவர், தமது ஆதரவாளர்களிடம் தீவிரமாக ஆலோசித்து வந்துள்ளார்.

கோட்டையில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட் ரமணன், சாந்த ஷீலா நாயர் ஆகியோரை ராஜினாமா செய்ய வைத்ததில், நடராஜனுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தின் பங்கு இருக்கிறது.

அவர்தான், ஜெயலலிதா நியமித்த அதிகாரிகள் யாரும் இருக்கக் கூடாது என்ற முடிவில் செயல்படுகிறார்கள் என்று ஆதரவாளர்களிடம் தமது ஆதங்கத்தை பன்னீர் வெளிப்படுத்தி உள்ளார்.

ஆட்சி அதிகாரத்துக்குள் நடப்பவை அனைத்தையும், சின்னம்மா கவனத்திற்குத் தெரியப்படுத்திக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.

தொண்டர்கள் மத்தியில் சின்னம்மா மீது அதிருப்தி இருக்கிறது. நடக்கும் சூழல்கள் நமக்கு சாதகமாக இல்லை.

முதல்வர் நாற்காலியை நோக்கி நீங்கள் நகர்ந்தால், இருக்கும் மொத்த அதிகாரமும் பறிபோய்விடும் என்றும் சின்னம்மாவிடம் தெரியப்படுத்தி விட்டேன் என்று தமது ஆதரவாளர்களிடம் அவர் கூறி உள்ளார்.

அவர்களுக்கு நான் பதவியில் நீடிப்பதில் உடன்பாடு இல்லை. எனக்குப் பதவி பெரிதல்ல. அம்மாவின் புகழைக் காப்பாற்றினால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறேன்.

என்னை தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள் என்றும் பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்களிடம் கண்கலங்கி இருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings