பொதுவாக தினமும் காலையில் ஜாக்கிங் செய்வது வாக்கிங் செல்வதை விட நல்லது என்று கூறப்படுகின்றது. இதனால் அதிகப்படியான கலோரியை மிகக் குறைந்த நேரத்தில் எரிக்க முடியும்.
அது மட்டுமின்றி இதனால் நேரம் மட்டும் அல்ல. நம்முடைய உடலில் உள்ள ஆற்றல்களும் கூட சேமிக்கப் படுகின்றன. ஜாக்கிங் செய்வதால் நம்முடைய உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
அந்த மாற்றங்களில் மிகவும் முக்கியமான சில இங்கே கொடுக்கப் பட்டுள்ளது இதை படித்து விட்டு சேர் செய்யுங்கள்.
மனநலம்
ஜாகிங் செய்யும் போது மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்து, மகிழ்ச்சியான மன நிலையை ஏற்படுத்துகிறது. இதனால், மனநலம் மேம்படுகிறது.
உடல் எடை குறைகிறது
ஒரு மணி நேரம் ஜாகிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, ஃபிட்டான தோற்றம் கிடைக்கிறது.
நுரையீரல்
நுரையீரல், மூச்சுக் குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
சீரான ரத்த அழுத்தம்
ஜாகிங் செய்யும் போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்து கொடுக்கின்றன. இது, ரத்தக் குழாய்கள் ஃபிட்டாக இருக்கவும், ரத்த ஓட்டம் சீராகப் பாயவும் வழிவகுத்து, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கிறது.
வலிமையான நோய் எதிர்ப்பு மண்டலம்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்று வியாதிகள் எளிதில் பாதிக்காது.
எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது
ஜாகிங் செய்யும் போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப் படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
உடல் வலிமை அதிகரிக்கிறது
கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. தசைநார்கள் (லிகமென்ட்) வலிமை பெறுகின்றன.
வலுவான மூட்டுக்கள்
எலும்புகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் தசைநார்களை வலிமை யாக்குகிறது. இதனால், சாதாரண விபத்துக்களினால் ஏற்படும் எலும்பு முறிதல், மூட்டுப் பிரச்னை போன்றவை தவிர்க்கப் படுகின்றன.
ஆளுமை அதிகரிக்கிறது
ஓட்டப் பயிற்சி மற்றும் ஜாகிங், தனிநபர்களின் ஆளுமையை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்களை நீங்களே கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
சர்க்கரை நோய்கான வாய்ப்புக் குறைகிறது
ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.