முதலமைச்சர் கனவில் இருந்த சசிக்கு சாட்டையடி !

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியதை யடுத்து சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது.
முதலமைச்சர் கனவில் இருந்த சசிக்கு சாட்டையடி !
சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இன்று தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் 

அவரது பெயரை மட்டும் நீக்கி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்ட மூன்று பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். 

இதனால் தண்டனை காலம் நான்கு ஆண்டுகள் உள்பட அடுத்த 10 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது.

விசாரணை நீதி மன்றத்தில் இன்று மாலைக்குள் சசிகலா உள்ளிட்டோர் சரணடை யவும் உத்தர விடப் பட்டுள்ளது. 
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப் பட்டதன் மூலம் நீதி வென்றி ருக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். உச்சநீதி மன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த தீர்ப்பால் சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந் துள்ளது.
Tags:
Privacy and cookie settings