பெங்களூருவில் பள்ளியில் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பிளாந்தர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது.
இங்கு படித்து வரும் 3 வயது குழந்தையை, அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் மஞ்சுநாத், கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்து ள்ளார்.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற குழந்தைக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் குழந்தையை பெற்றோர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற போது, அவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப் பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியரை மஞ்சுநாத்தை கைது செய்தனர்.