நியூயோர்க் நகரம் வெளியிடும் Co2 வாயு - இவ்வளவு பெரிதா?

சமீபத்தில் அமெரிக்காவில் புவியிய லாளர்களால் மேற்கொ ள்ளப் பட்ட ஒரு கணிப்பின் படி கடந்த 2010 ஆம் ஆண்டு நியூயோர்க் நகரம் 54 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைட்டு (Co2) வாயுவை வளிமண்ட லத்துக்கு வெளியேற் றியிருப்பதாக கூறப்பட் டுள்ளது.

மேலும் ஒவ்வொரு செக்கனும் 2 டன் கார்பனீரொட்சைட்டை பூமிக்கு வெளியிட்டு வருவதாகவும், இதில் 75% வீத வெளியேற்றம் நியூயோர்க் நகர கட்டடங்களில் இருந்து வெளி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதில் ஒரு டன் கார்பனீரொட்சைட்டை 33 அடி ஆரையுள்ள கோளமாகக் கருதி ஒரு வருடத்தில் நியூயோர்க்கின் மொத்த வெளியேற்றத்தையும் ஒரே இடத்தில் குவித்தால் கீழே உள்ள படத்தைப் போன்று பிரம்மாண்ட கார்பன் கோளக் குவியல் உண்டாகும். 

இந்த வீடியோவில் நியூயோர்க்கின் ஒரு நாளைக்கான மொத்த கார்பன் வெளியேற்றமும் ஒரு வருடத்துக்கான மொத்த கார்பன் வெளியேற்றமும் எவ்வளவு இடத்தை அடைக்கும் என விரிவாக காட்டப்பட்டுள்ளது. 

நீங்கள் இதைப் பார்வையிட்டால் நிச்சயம் ஒரு நிமிடம் பிரமித்துப் போவீர்கள்! இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு? நான் ஏன் பிரம்மிக்க வேண்டும் என்கிறீர்களா? 

ஏனெனில் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் என்பவற்றிற்கு இந்த கார்பனீரொக்சைட்டின் அதிக வெளியேற்றம் ஒரு முக்கியமான காரணமாக திகழ்கிறது. இந்த வீடியோவில் ஒரு உதாரணத்திற்கு தான் நியூயோர்க்கை எடுத்துக்கொண்டார்கள். 

அபிவிருத்தி அடைந்த, மிகவும் உயரிய வாழ்க்கை தராதரம் கொண்ட நியூயோர்க்கிலேயே இப்படி என்றால் நம்மவர் நாடுகளை யோசித்து பாருங்கள். 

மனிதனால் விளைவிக்கப்படுகின்ற கார்பன் டை ஆக்சைட்டு தான் இந்த வளிமண்டத்தில் மிக அதிகமாக காபன் டை ஆக்சைட்டின்செறிவை அதிகரிக்க செய்கிறது. 



பெரும்பாலும், வெப்ப முண்டாக்கல், மின் உற்பத்தி, போக்குவரத்து போன்ற தேவைக ளுக்காக பெற்றோலிய பொருட்களை எரித்தல் மூலம் கார்பன் டை ஆக்சைட்டு அதிகமாக வெளியேற்றப் படுகிறது. 

பச்சைவீட்டு வாயுக்களில் பிரதானமானது காபன் டை ஆக்சைட்டு. இதன் செறிவு அதிகரிக்கும் போது, காலநிலை மாற்றம் ஏற்படுவதுடன், புவி வெப்பம டையதல் வீதமும் அதிகரித்து செல்கிறது. 

இதனால் அநேக உயிரின வகைகள் அழிவது மட்டுமில்லாமல் சூழல் மண்டலங்களின் வேற்றுமை த்தன்மையும் குன்றுகிறது. துருவ பகுதிகள் மிக எளிதில் வெப்பம டைகின்றன. பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகின்றன. 

கடல் மட்டம் உயர்வ டைகிறது. அதிகமாகும் வெப்பம் அதிகமாக குளிரவும் வைக்கிறது. மனிதர்கள் மேல் இருக்கும் இந்த தாக்கங்கள் ஒரே சீராக பரவி இருப்பதில்லை.

வருங்கால தட்ப வெப்ப மாற்றங் களால் அதிக அளவில் பாதிக்கப்பட ப்போவது ஆபிரிக்கா என கூறலாம். வளர்ந்த நாடுகளை விட வளர்ந்து வருகின்ற நாடுகள் இந்த தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப் படுகின்றன.
இங்கு இங்கு செல்லுங்கள் : http://www.carbonvisuals.com/

இன்னும் பாதிப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நீங்கள் சாதார ணமாக உங்கள் அறைகளில் பயன்படுத்தும் ஒரு அதிக வால்ட் உடைய மின்குமிழும் காபன் டை ஆக்சைட்டு செறிவை அதிகரிக்க செய்கிறது. 

இதன் மூலம், அட்லாண்டிக்கில் உள்ள ஒரு பனிப்பாறை கரைவதற்கு நீங்களும் ஒரு காரணம் என விளக்குவதற்கே இந்த வீடியோக்களை தயாரித்திருக்கிறார்கள். 

வெறுமனே டன் கணக்கிலோ, கிலோ கணக்கிலோ சொன்னால் இலகுவில் புரிந்து கொள்ள முடியாது என்பதால் இந்த ஒப்பீட்டு வடிவங்களை பயன்படுத்தியி ருக்கிறார்கள். 
பச்சைவீட்டு விளைவு, புவி வெப்பமடைதல், கார்பன் டை ஆக்சைட்டு வெளியேற்றம் தொடர்பில் மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?
Tags:
Privacy and cookie settings