முடிவெடுத்து விட்டார்கள் மாணவர்கள். சகாயம் ஆட்சியரை இரண்டு ஆண்டுகளாக அழைத்துப் பார்த்தார்கள் மக்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மாபெரும் வெற்றிக்குப் பினும் மாணவர்கள் அழைத்துப் பார்த்தார்கள். சகாயம் செவி மடுக்கவில்லை.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஒரே ஒரு தலைவன் இருந்திருந்தால் கடைசி நாளன்று நடந்த போலீஸ் வன்முறை நடந்திருக்காது.
யார் கட்டளையிடுவது யார் ஒருங்கிணைப்பது என்கிற பெரும் குழப்பமே போலீஸ் வெறியாட்டத்திற்கு வழிவகுத்தது.
இதோ நெடுவசாலை போர்க்களமாக்கி விட்டார்கள் மாணவர்கள். தெறிக்குது டெல்லி. வாடிவாசலை மீட்ட மாணவர்கள் நெடுவாசலை மீட்க கிளம்பி விட்டனர்.
மாணவச் செல்வங்களுக்கு இப்போது தேவை ஒரு நேர்மையான கம்பீரமிக்க தலைவன். அந்த தலைவன் கமல்ஹாசன் தான் என்று முடிவெடுத்து விட்டார்கள்.இனி ரஜினியை நம்பிப் பயனில்லை.
கமலை நம்பினால் பயமில்லை என்கிற திடமான முடிவெடுத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கம் ஒன்றை நெடுவாசலில் துவக்கி விட்டார்கள். இனி கமல் வந்தே ஆக வேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது.
வருக உலக நாயகனே..!