ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின், அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்களை உற்று நோக்கி கொண்டு இருக்கும் பலரும், கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்க ஆசைப் படுகிறார்கள்.
ஏன்? ராகவா லாரன்சுக்கே ஆசை வந்துட்டுன்னா, பாருங்களேன். அப்படி இருக்கும் போது, தலைவா வா, தலைமை ஏற்க வான்னு சொல்லி எப்போதும் உசுப்பேற்றி கொண்டே இருக்கும் ரஜினிக்கு யோசனை வராதா?
இது தான் சமயம், தமிழகம் தலைமை இல்லாமல் தள்ளாடுது, வாங்க ” என்று எல்லோரும் சொல்ல, இப்போது ரஜினி நாட்டு நடப்பை நண்பர்களிடம் விவாதிக் கிறாராம்.
மாவட்ட ரீதியாக தீவிர ரசிகர்கள் கணக்கெடுப்பு நடந்து கொண்டு இருக்கிறது.
அத்தோடு, ஒரு முக்கிய செய்தி. வருகிற மார்ச் மாதம் தமிழக மாவட்ட ங்களின் தலை நகரங்களுக்கு ரஜினி விசிட் பண்ண போகிறார்.
பெரிய மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கிறாராம். அதன் பின் பெரிய மாநாடு ஒன்றை சென்னையில் நடத்தவும் திட்டமிட்டு உள்ளாராம்.
ஆனால், அவரது முடிவு ரொம்ப லேட்டாக வருவதால், இன்றைய இளைஞர் கூட்டம் ஏற்றுக் கொள்வார்களா என்ற அச்சமும் இருப்பது தெரிய வந்துள்ளது.