அண்ணா அறிவாலய த்தில் செய்தி யாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவியேற்ற பின் ஜெயலலிதாவின் படத்தை மேஜை மீது வைத்துக் கொண்டு கையெழுத்து போட்டுள்ளார் என்றார்.
சட்ட சபையில் எடப்பாடி பழனிச்சாமி தன் பெரும் பான்மையை நிரூபித்த பொழுது ஏற்பட்ட பிரச்னை குறித்து அண்ணா அறிவாலய த்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை அளிக்கப் பட்டுள்ளது. இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தி ருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார். ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி, அவரது படத்தை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துவது அவமானம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.