தமிழக சட்டசபையில் ஏகப்பட்ட அமளிகளுக்கு பின்னர் ஒரு வழியாக நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்துள்ளது. முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிர்ப்பாக 11 வாக்குகளும் பதிவாகி யுள்ளது.
இந்நிலையில் இந்த வாக்கெடுப்பு குறித்து நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத் தளத்தில் தெரிவித்து ள்ளதாவது:
சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ஒரு லேப்டாப்பை கொடுத்து விடுங்கள். இதனால் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது குழுவினர் களும்
இனி நான்கு ஆண்டுகள் பெங்களுரூ க்கு செல்லும் பயண செலவாவது மிச்சப்படும். நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாக உணவில் உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக அவர் மேலும் கூறியதாவது: இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும். தமிழ்நாட்டுக்கு இனி நம்பிக்கை எதுவும் உள்ளதா? சட்ட மன்றக் காட்சிகளை சிறுவர்களும் பார்க்கட்டும்.
இதிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளட்டும். ஜனநாயகத்தின் மோசமான நாட்கள் இதுதான். மேலும் திமுக தனது எதிர்க்கட்சி பணியை சரியாக செய்துள்ளது' என்று கூறியுள்ளார்.