யானையைக் கட்டி தீனி போடுவதை நாம் கேள்வி பட்டிருப்போம். எருமையைக் கட்டி தீனிப் போடுவது பற்றி உங்களுக்குத் தெரியுமா?, ஆம், அமெரிக்கா வின் டெக்சாஸ் நகரில் வசிக்கும் ரோனி
மற்றும் ஷெரான் தம்பதியினர் சுமார் 1200 கிலோ எடை கொண்ட ஒரு எருமை மாட்டை கடந்த 10 வருடங்க ளாக சீராட்டி, பாராட்டி வளர்த்து வருகின்றனர். 11 வயது கொண்ட அதன் பெயர் “வைல்ட் திங்”.
‘வைல்ட் திங்’ தங்குவதற் கென்றே ஒரு பிரத்தியேக அறை அவர்களது வீட்டில் ஒதுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் அது அங்கே தங்காமல் ரோனி, ஷெரோன் தம்பதிகளோடு அமர்ந்து டி.வி. பார்ப்பதும்,
அவர்களோடு இணைந்து டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதும், விளையா டுவதும், தூங்குவதும் என பல்வேறு சாகசங்களை செய்து வருகிறது.
மேலும், ரோனி தம்பதியினர் அதற்கு ரைம்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது, அந்த ராகத்துக்கு ஏற்றவாறு தலையை அசைத்து பாவனை செய்து நடனமும் ஆடுகிறாராம் நம்ம ‘வைல்ட் திங்’.
இதில் சுவாரஷ் யமான விஷயம் என்ன வென்றால் ரோனி தம்பதியி னரின் திருமணத் தின் போது வரவேற் பாளராக முன்னின்று விருந்தி னர்களை வரவேற்றது நம்ம ‘வைல்ட் திங்’ தானாம்.
இது குறித்து ஷெரோன் கூறும் போது, ‘வைல்ட் திங்’ சிறுவனாக இருந்த போது அவனை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று ரோனியிடம் நான் கூறினேன்.
அதற்கு மறுப்பு தெரிவிக் காமல் உடனே ஓகே சொல்லி விட்டார். தற்போது 11 வருடங் களைக் கடந்தும் எங்கள் குடும்பத்தில் ஒருவனாக அவன் இருக்கிறான்.
அவன் சிறுவனாக இருந்த போது ஒரு முறை நான் பல் துலக்கி விட முயற்சித்த போது என்னை முட்டி கீழே தள்ளி விட்டான்.
என்னை தாங்கி பிடித்த ரோனியையும் ஓங்கி மிதித்து ஓடி விட்டான். இருந்த போதும் அவன் மீது எங்களுக்கு கோபம் வர வில்லை என்றார்.
கொரோனாவை விட மோசமான நோய்கள்... இதில் ஒன்று வந்தாலும் நரகம் தான் !
இந்த கதையை படித்த பிறகு உங்களை யாராவது “எருமை மாடே” என்று திட்டினால் கோபம் வரும்..?