கதவுகளை மூடி விட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு !

தமிழக சட்ட சபையின் கூட்டம் இன்று நடந்த போது கதவுகள் அனை த்தையும் மூடி விட்டு வாக்கெடுப்பை நடத்தினர்.தமிழக சட்ட சபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட் டிருந்தது.
கதவுகளை மூடி விட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு !
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். சபை கூடியதும், எதற்காக அது கூட்டப் பட்டுள்ளது என்பதை சபாநாயகர் தனபால் அறிவித்தார். பின்னர் முதல்வர் தீர்மான த்தைக் கொண்டு வந்து பேசினார்.

அதன் பின்னர் அவைக் கதவுகள் மூடப்பட்டு 6 பிரிவாக எம்.எல்.ஏ க்களிடம் ஓட்டெடுப்பு நடை பெற்றது. காலை 11.30 மணிக்கு ஓட்டெடுப்பு நடை பெற்றது. கதவுகளை அடைத்து விட்டு வாக்கெடுப்பு நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
Tags:
Privacy and cookie settings