அதிகரிக்கும் நெருக்கடி.. சசிகலாவிடம் குமுறும் தினகரன் !

அமைச்சர் பதவி கேட்டு, சீனியர் எம்.எல்.ஏக்களும், ஜாதி வாரியாக பலமாக உள்ளவர்களும் அதிமுக துணைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ள தினகரனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித் துள்ளனர்.
அதிகரிக்கும் நெருக்கடி.. சசிகலாவிடம் குமுறும் தினகரன் !

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு அளித்தால் அமைச்சர் பதவி தரப்படும் என்று வன்னியர், முக்குலத்தோர் ஜாதி சீனியர் எம்.எல்.ஏ க்களுக்கு வாக்குறுதி அளித்து அவர்கள் ஓ.பி.எஸ் பக்கம் போகாமல் தடுத் துள்ளார் தினகரன்.

இப்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் வென்று விட்டதால், அமைச்சர் பதவி கேட்டு அவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித் துள்ளனர்.

நெருக்கடி

சீனியர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சாதி ரீதியிலான எம்.எல்.ஏ. க்கள் தினகரனுக்கு நெருக்கடி தரத்து வங்கி யுள்ளனர் என்று அதிமுக வட்டார ங்கள் நம்மிடம் தெரிவிக் கின்றன. 

பெரும்பான்மை நிரூபித்த பிறகு கேபினெட்டை மாற்றி யமைப்போம் என உறுதி தந்திருந் ததை நினைவு படுத்தி அமைச்சர் பதவியை கேட்டு நச்சரிக்க தொடங்கி யுள்ளனராம்.

வாரிய தலைவர்

அமைச்சர் பதவி என்பது குறிப்பிட்ட அளவுக்கே நிரப்ப முடியும். இருக்கும் அமைச்சர் களை ஜெயலலிதா காலத்தை போல திடீரென மாற்ற முடியாது என்பதை உணர்ந்துள்ள பல விவரமான சீனியர்கள், 

அமைச்சர் பதவிக்கு இணையான வாரியத் தலைவர் பதவியை கேட்டு நச்சரிக்க தொடங்கி யுள்ளனராம்.

சிறையில் குமுறல்

இதை எப்படி சமாளிப்பது என்பது தினகரனுக்கு பெரும் தலை வலியாக மாறியுள்ளது. பட்ஜெட் முடிந்ததும் நிச்சயம் வாய்ப்பு தருகிறோம். 

இது பற்றி சின்னம்மா வை சந்தித்தும் பேசுகிறேன் என சொல்லி சமாதானப் படுத்தியு ள்ளராம் தினகரன். 

நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவு டன், தினகரன் இது குறித்து வெகு நேரம் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் இது குறித்து தினகரன், தனது சித்தி சசிகலாவிடம் ஆலோசனை கேட்டாராம்.

பெண் சீனியர்கள்

அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி பிரச்சினை யால் கட்சிக்குள் கலகம் வந்துவிடக் கூடாது என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி யுள்ளாராம், அதிமுகவின் சின்னம்மா. கோகுல இந்திரா, வளர்மதி போன்றோர்

சிறையில் சசிகலாவை சந்தித்து, தங்களுக்கு வாரிய தலைவர் பதவியை அளிக்க வேண்டும் என்று கேட்க திட்ட மிட்டுள்ளார் களாம்.
Tags:
Privacy and cookie settings