திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்... ஸ்டாலின் தர்ணா !

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுகவினர் இடையூறு செய்ததாக குற்றம் சாட்டி அக்கட்சி எம்.எல்.ஏ க்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தர விட்டார். 
திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்... ஸ்டாலின் தர்ணா !
ஆனால் வெளியேற மறுத்த திமுகவினரால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை யடுத்து சபையை ஒத்தி வைத்து விட்டு படிப்படியாக அவர்கள் வெளியேற்றப் பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிய சபாநாயகர் முயன்றபோது அதை திமுகவினர் தடுத்தனர். 

ரகசிய வாக்கெடுப்பு தேவை என கோரி பெரும் அமளியில் ஈடுபட்டனர். மேஜை, நாற்காலிகள் உடைந்தன. சபாநாயகர் தள்ளு முள்ளு விற்கு உள்ளானார்.

இதை யடுத்து 1 மணிக்கு சபை மீண்டும் கூடியது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதை சபாநாயகர் ஏற்க வில்லை. 
எனவே மீண்டும் திமுகவினர் கோஷமிட்டனர். அமைச்சர்கள் மேஜை மீது ஏறி நின்று சபாநாய கரை நோக்கி கோஷ மிட்டனர். சபாநாயகர் முன்பாக இருந்த மைக்கை மீண்டும் உடைத்தனர்.

எனவே, சபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ க்கள் வெளியேற்ற கூறி சபாநாயகர் உத்தர விட்டார். அவைக் காவலர்கள் புகுந்து திமுக வினரை வலுக்கட்டா யமாக வெளியேற்ற முற்பட்டனர். 

இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவி த்ததால், சட்ட சபையில் இருந்து திமுக எம்எல்ஏ க்கள் குண்டு கட்டாக வெளியேற்ற முயற்சி நடைபெற்றது. 

அவைக் காவலர்கள் வெளியேற்ற முயன்ற போது, திமுகவினர் எதிர்த்து தள்ளு முள்ளு செய்தனர். கோஷ மிட்டனர். இதனால் காவலர்களால் வெளியேற்ற முடிய வில்லை. 

உள்ளேயே திமுக வினர் தர்ணா நடத்தியதால் அவையை மதியம் 3 மணிக்கு ஒத்தி வைத்தார் சபாநாயகர் தர்ணா. திமுக உறுப்பினர்கள் வெளியே போககூடாது என்ற முடிவோடு உள்ளேயே அமர்ந்தனர். 
சபை ஒத்தி வைக்கப் பட்ட இடைவெளியில், ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏ க்களாக குண்டுகட்டாக காவலர்கள் வெளியேற்றனர். இதை கண்டித்து மு.க. ஸ்டாலின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். 

அவருடன் பிற திமுக உறுப்பின ர்களும் தர்ணா நடத்தி வருகிறார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Tags:
Privacy and cookie settings