உலகிலேயே ஆபத்தான நாடாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்க உளவுப் படையின் முன்னாள் உயர் அதிகாரி பகீர் தகவலை வெளியிட் டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமா பாத்தில் அமெரிக்க உளவுப் படையின் (சி.ஐ.ஏ.) நிலைய அதிகாரியாக பணி யாற்றியவர் கெவின் ஹல்பெர்ட்.
இவர் அமெரிக்காவில் இயங்கி வருகிற உளவுப் படையினருக் கான ‘சைபர் பிரீப்’ என்ற இணைய தளத்தில் பாகிஸ்தான் குறித்து ஒரு பதிவை வெளியிட் டுள்ளார்.
அதில் அவர், உலகத்துக்கே பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடாக இருக்கக் கூடும். பாகிஸ்தானின் தோல்வி உலகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
பாகிஸ்தான் தோல்வியை சந்திக்கப் போகிற மிகப்பெரிய ஒரு வங்கியைப் போன்றதாகும் அல்லது
மிகப்பெரிய தோல்வியை அனுமதிக்கும் மிகப்பெரிய வங்கியைப் போன்ற தாகும். வங்கியை தோல்வி அடைய அனுமதிக்கிற போது, அது நாட்டின் பொருளா தாரத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தி விடும்.
நமக்கு 3 கோடியே 30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஆப்கானிஸ் தானில் மிகப்பெரிய பிரச்சினை கள் இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் 18 கோடியே 20 லட்சம் மக்கள் உள்ளனர்.
இது ஆப்கானிஸ் தானைப் போன்று 5 மடங்கை விட அதிகம்.சரிவை சந்தித்து வரும் பொருளாதாரம், பரவலான பயங்கர வாதம்,
அதிவேக மாக வளர்ந்து வரும் அணு ஆயுதம், உலகின் 6-வது பெரிய மக்கள் தொகை, உலகின் அதிகபட்ச பிறப்பு வீதம் கொண்ட ஒரு நாடு,
இந்த வகையில் எல்லாம் பார்க்கிற போது பாகிஸ்தான் பெரும் கவலையை அளிக்கிற நாடாக விளங்குகிறது.
பாகிஸ்தானு க்கு அமெரிக்காவும், சர்வதேச நிதியமும் (ஐ.எம்.எப்.) கோடிக் கணக்கான டொலர்கள் நிதி உதவி செய்கின்றன.
நாம் தொடர்ந்து பாகிஸ்தானு க்கு நிதி உதவி செய்து, அவர்களை நல்ல நடத்தையை நோக்கி வழி நடத்த முயற்சித்தும்,
அதில் ஓரளவு தான் வெற்றி பெற முடிந்தி ருக்கிறது என அந்த பதிவில் அவர் குறிப்பிட் டுள்ளார்.