நைஜிரியா நாட்டை சேர்ந்த 2வயது குழந்தை ஹோப். இந்த குழந்தை சாத்தானின் குழந்தை யாக பார்க்கப்பட்டு, வெறுக்கப் பட்டு சாலையில் வீசப்பட்டார்.
கடந்த 2016ம் ஆண்டு டென்மார்க்கை சோ்ந்தவரும், தற்போது ஆப்ரிக்காவில் வசித்து வரும் அன்ஜா ரிங்ரின்லோவன் என்ற பெண் உயிருக்கு போராடிய அந்த சாத்தானின் சந்ததியான குழந்தையைப் பார்த்தார்.
தனது கையில் இருந்த தண்ணீர் பாட்டில் மூலம் தண்ணீரைக் கொடுத்தார். ஏன் இப்படி இருக்கு என்று கேட்டு தெரிந்து கொண்டார்.
அந்த குழந்தை மீது பரிதாபம் கொண்ட அவர் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தார்.
அந்த குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ரத்தம் ஏற்றப்பட்டது.
தினமும் அந்த குழந்தைக்கு ரத்த மாறுதலும் செய்யப்பட்டது. இந்த செயலை அவர் தனது சமூக வலை தளத்தில் போட்டார்.
பல நாடுகளில் இருந்து இவருக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் உதவியாக பணம் கிடைத்தது.
ஹோப்புக்கு உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட போது அந்த குழந்தையை ஆபிரிக்கா குழந்தைகள் உதவி கல்வி மற்றும் வளர்ச்சி மன்றத்தில் சோ்த்தார்.
தற்போது அந்த குழந்தை உலக மக்களின் உதவியோடு கல்வி பயில பள்ளிக்கு சென்று வருகிறான்.
சாத்தான் குழந்தை என்று பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை உலக மக்களால் நல்ல முறையில் வளர்க்கப்படுகிறது.