இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தல தோனி, தற்போது திடீரென ஐபிஎல் போட்டி தொடரில்
புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகி யுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
ஐபிஎல் போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல் பட்டவர் தோனி. ஆனால் ஐ.பி.எல். தொடரில் விளையாட சென்னை
மற்றும் ராஜஸ்தான் அணிகளு க்குத் தடை விதிக்கப் பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு தோனி, புனே அணியின் கேப்டனாக ஒப்பந்தம் செய்யப் பட்டார்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 5 முதல் இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட் டுள்ளார்.
தோனி கேட்டுக் கொண்டதன் பெயரிலேயே அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டுள்ள தாகவும், அவருக்கு பதிலாக புனே அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் புனே செயல் படுவார் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும் புனே அணியில் தோனி, விக்கெட் கீப்பராக தொடர்ந்து செயல் படுவார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தோனி, ஐபிஎல் போட்டியில் புனே அணியில் இருந்தும் கேப்டனாக விலகியது கிரிக்கெட் ரசிகர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.