உயர் போலீஸ் அதிகாரிகளை சட்ட சபைக்குள் வர வழைத்து திமுக எம்.எல்.ஏ க்களை வெளியே அகற்ற, சபாநாயகர் உத்தர விட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கொண்டு வந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின் போது சட்ட சபையில் பெரும் அமளி வெடித்தது.
சபாநாயகர் மைக்கை திமுக எம்.எல்.ஏக்கள் உடைத்த தோடு, அவரையும் பிடித்து இழுத்தனர். சபாநாயகர் இருக் கையிலும் சில திமுக உறுப்பினர்கள் அமர்ந்து கொண்டனர்.
சட்டை கிழிப்பு
இதையடுத்து அவை 1 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. எனவே 3 மணிவரை அவையை ஒத்தி வைத்தார், சபாநாயகர்.
அப்போது அவையை விட்டு வெளியே போகாமல், உள்ளேயே அமர்ந்து தர்ணா செய்தனர் திமுக எம்.எல்.ஏக்கள். இதை யடுத்து குண்டு கட்டாக அவர்கள் வெளியேற்றப் பட்டனர்.
இந்த களேபரத்தில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப் பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்டாலினுக்கு உதை
போலீசார் பூட்ஸ் காலால் தன்னை எட்டி உதைத்ததாக ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.
இப்படி போலீசார் அளவுமீறி கெடுபிடி காட்டியதற்கு காரணம், அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வரவழை க்கப்பட்டது தான் என்பது அம்பலமாகி யுள்ளது.
மதியம் 2வது முறையாக சபை ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில் உயர் போலீஸ் அதிகாரிகளை சட்ட சபைக்குள் வருமாறு சபாநாயகர் உத்தர விட்டதாக கூறப்ப டுகிறது.
கமிஷனருக்கு கோரிக்கை
சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் சென்னை போலீஸ் கமிஷனருக்கு இது குறித்த ஒரு கோரிக்கை யுடன் கடிதம் அனுப்பியுள்ள தகவல் சமூக தளங்களில் வைரலாகி யுள்ளது.
அக்கடிதத்தில், கூடுதல் போலீஸ் கமிஷனர் ஸ்ரீதர், மேற்கு-இணை கமிஷனர் சந்தோஷ் குமார், வடக்கு-இணை கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார், அம்பத்தூர் துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர்கள் ரவி, கோவிந்தராஜ்,
சிவபாஸ்கர், முத்தழகு, தேவராஜ் ஆகியரின் பெயரை குறிப்பிட்டு அவர்களை சட்ட சபைக்குள் நுழைந்து அவை காவலர்கள் போல வெள்ளை ஆடையுடன் திமுக உறுப்பினர்களை அகற்ற அனுமதி கோரப்பட் டுள்ளது.
புரியாத புதிர்
சட்ட சபைக்குள் காக்கி சீருடையுடன் போலீசார் நுழைய அனுமதி கிடையாது. அதே நேரம், காவல் துறையை சேர்ந்தவர்கள் தான் வெள்ளை உடையுடன் அவைக்குள் பணியில் ஈடுபடுவார்கள்.
அவர்கள் மார்ஷல்கள் என அழைக்கப் படுவர். எனவே மார்ஷல் உடையில் சட்ட சபைக்குள் போலீசார் செல்வது மரபு.
ஆனால் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் தான் வேண்டும் என்று குறிப்பிட்டு திமுக உறுப்பினர்கள் வெளியே அனுப்பப்பட் டுள்ளது ஏன் என்பது புரிய வில்லை.