சம்பாதிக்கும் பணம் தங்க வில்லையா?

நாம் கஷ்டப்பட்டு சம்பதிப்போம். அந்த பணங்கள் மற்றும் செல்வங்கள் வீட்டில் நிலைப்பதில்லையே என்ற ஏக்கம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கின்றது. 


அதனுடைய காரணங்கள் என்ன என்பது பற்றிய விவரங்கள் தெரிந்தால், அதை நாம் தீர்த்து விடலாம்.

வாஸ்து சாஸ்திரம் கூறுவதை போல நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி, இருக்கும் அந்த தவறான செயல்பாடுகள் என்ன தெரியுமா?

1. நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. அதற்கு என்ன காரணம் என்றால், நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும்.

2. வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் அடைந்த கண்ணாடி ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் இவைகள் நமது வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.

3. உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இதுபோன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது. என்னெனில் இவைகள் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும்.

4. முள்கள் இருக்கும் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்காமல், வீட்டின் வெளியில் வைக்க வேண்டும். ஏனெனில் இது நமது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

5. நமது வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்குகிறது.

6. வீட்டில் உள்ள பயன்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விடாமல் அதை வெளியில் போட்டு விட வேண்டும்.

ஏனெனில் அந்த கடிகாரமானது நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கச் செய்கின்றதாம்.
Tags:
Privacy and cookie settings