துரோகம் பண்ணிடாதீங்க வளர்மதியிடம் கதறும் ஆடியோ !

1 minute read
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் அதிரடி பேட்டி யளித்தார். 
துரோகம் பண்ணிடாதீங்க வளர்மதியிடம் கதறும் ஆடியோ !
இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியி லிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கினார் சசிகலா.

இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும், மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்கத் தயார் எனவும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள் போயஸ் தோட்டத் திற்கு விரைந்தனர். பின்னர், அவர்களை சசிகலா தரப்பில் ரகசிய இடத்தில் வைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு 5 எம்எல்ஏக்களும், முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவித் துள்ள நிலையில், சமூக வலைத் தளங்களில் முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி,

எம்எல்ஏக் களிடம் கோரிக்கை வைக்க அவர்களின் முகவரி உள்ளிட்ட தொலைபேசி எண்களை வெளியிட்டி ருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான வளர்மதியிடம், அதே தொகுதி தொண்டர் ஒருவர் போன் செய்து ஆதரவு தருமாறு கேட்டுள்ளார்.
 https://soundcloud.com/ethanthi/valarmathi
அதில், உங்க கால புடிச்சி கேட்கிறேன் எங்களுக்கு துரோகம் பண்ணிடா தீங்க’’ என்று கதறலுடன் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி யுள்ளது.

இந்த ஆடியோ வெளியீட்டால், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Today | 31, March 2025
Privacy and cookie settings