முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரின் இல்லமான போயஸ் தோட்டத்தை சசிகலா தான் பராமரித்து வசித்து வந்தார்.
தற்போது சசிகலா சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில், போயஸ் இல்லம் யார் நிர்வகிப்பது, யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபாவும் போயஸ் இல்லம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.
அவரின் ஆதரவாள ர்களும் திடீரென போயஸ் தோட்டத்தை முற்றுகை யிட்டு கைப்பற்றலாம் என சசிகலா தரப்பினர் அச்சத்தில் உள்ள தாகவும் கூறப்ப டுகிறது.
தீபா ஆதர வாளர்கள் போயஸ் தோட்டத்தை கைப்பற்றி விடக் கூடாது என வழக்கத்திற்கு மாறாக தனியார் செக்யூரிட் டிகளும், கட்சிக் காரர்களும் போயஸ் தோட்டத்தில் குவிக்கப்பட் டுள்ளனர்.
தொடர்ந்து 24 மணி நேரமும், போயஸ் தோட்டம் இல்லத்தை பாதுகாத்தும் வருகின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா சிறையில் அடைக்கப் பட்ட நிலையில்,
தற்போது துணைப்பொதுச் செயலாளராக இருக்கும் டி.டி.வி. தினகரனை போயஸ் இல்லத் திலேயே தங்கச் சொல்லியி ருக்கிறாராம் சசிகலா.
ஏற்கெனவே தமிழக முதல்வர் போயஸ் தோட்டத்தை ஜெயலலிதா நினைவிட மாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அப்படி நினைவிட மாக்கும் அறிவிப்போ
அல்லது பொதுமக்கள் மற்றும் சசிகலா அதிருப்தி அ.தி.மு.க.,வினர் மூலம் போயஸ் தோட்டத்தை முற்றுகை யிடக் கூடும் என அச்சம் இருப்பதால்,
அதை எப்படி எதிர் கொள்வது குறித்தும், தினகரனுக்கு, சில யோசனைகளை சசிகலா கூறிவிட்டுச் சென்றுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.
போயஸ் தோட்டத்தை கையை மீறி செல்லாமல் இருக்க அவ்வப்போது, சட்ட ஆலோசனை யிலும் டி.டி.வி.தினகரன் ஈடுபட்டு வருவதா கவும்,
எந்த நிலையிலும் போயஸ் தோட்ட இல்லத்தை விடக்கூடாது என்ற நிலையில், சசிகலாவும், அவரது குடும்பத்தாரும் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.