சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டு க்குள் போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி உன தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மூவரும் உடனடியாக சரணடைய உத்தர விட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் 500க்கும மேற்பட்ட காவல் துறையினரும் ரிசார்ட்டுக்குள் நுழைந் துள்ளனர்.
30க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வந்திறங்கிய காவல் துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கூவத்தூர் ரிசார்ட் தற்போது வந்துள்ளதாக கூறப் படுகிறது.
இதனால் சசிகலா கைது செய்யப் படுவார் என தகவல் வெளியாகி யுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.