சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் காயத்திரி போஸ் (33). இவர் சமீபத்தில் ஜெர்மனியின், பிராங்பர்ட் நகருக்கு சென்றி ருக்கிறார்.
அங்கிருந்து பாரீஸ் நகருக்கு செல்வதற்காக விமான நிலையம் சென்றி ருக்கிறார்.
அப்போது விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது, ஸ்கேன் மிஷினில், காயத்திரி போஸ் ஹேண்ட் பேக்கில் ஒரு வினோத கருவி இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.
எனவே ஹேண்ட் பேக்கை சோதனை போட்டு பார்த்தனர். அதில் தாய்ப்பாலை குழந்தைக்கு உந்தி தள்ளும் ‘மார்பக பம்ப்’ என்ற சிறு கருவி இருந்தி ருக்கிறது.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கைக் குழந்தை இல்லாத நிலையில், எதற்காக இந்த கருவியை உடன் கொண்டு செல்கிறீர்கள்? குழந்தை என்ன சிங்கப்பூரிலா இருக்கிறது என்று கேலியாக கேள்விகளை எழுப்பி யுள்ளனர்.
காயத்திரி போசுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும், 7 மாதங்களில் மற்றொரு குழந்தையும் உள்ளன. அக்குழந்தை களை சிங்கப்பூரில் விட்டு விட்டு தான், காயத்திரி போஸ் ஜெர்மனி வந்திருந் திருக்கிறார்.
7 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வசதியாகவே அந்த உந்து கருவியை அவர் எப்போதும் ஹேண்ட் பேக்கில் வைத்திருப்ப தாக கூறியி ருக்கிறார்.
காயத்திரி போசின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள். பெண் அதிகாரிகளிடம் காயத்திரி ஒப்படைத் திருக்கின்றனர்.
அவர்கள் காயத்திரியின் மேலாடைகளை களைய சொல்லி, மார்பகங்களை சோதனை செய்திருக் கிறார்கள்.
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போது எப்படி செய்வீர்களோ அதை செய்து காட்டுங்கள்.
பால் சுரந்து வருகிறதா என்பதை பார்க்க வேண்டும் என்று கூறி முக்கால் மணி நேரம் காயத்திரியை சோதனை செய்திருக் கிறார்கள்.
அதிகாரிகள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்திருந்ததால் அவரால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடிய வில்லை.
அரை நிர்வாணமாக அதிகாரிகள் முன்னிலையில் செய்முறை விளக்கம் கொடுத்திருக்கிறார் காயத்திரி போஸ்.
இது குறித்து பிரிட்டீஷ் செய்தி தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், 45 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த பிறகு தான் என்ன நடந்தது என்றே எனக்கு படிப்படியாக புரியத் தொடங்கியது.
நான் அதிகாரிகள் முன்னிலையில் மார்பகங்களை காட்ட வற்பறுத்தப் பட்டேன் என்று உணர்ந்ததும் எனக்கு அழுகையே வந்து விட்டது.
இது பெருத்த அவமானம். இந்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்று அவர் கூறியிருக்கிறார்.