அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப் பட்டது குறித்த தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு, நாளைக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதிமுக சட்டத் திட்டப்படி தற்காலிக பொதுச் செயலாள ராக சசிகலா தேர்வு செய்யப் பட்டது செல்லாது என்று கூறி தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் புகார் மனு அளிக்கப் பட்டது.
அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்தே பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும், தற்காலிக பொதுச் செயலாளராக யாரையும் நியமிக்கவும் முடியாது என்பதே எம்.ஜி.ஆர்., அதிமுகவை உருவாக்கிய போது ஏற்படுத்தப் பட்ட விதிமுறை.
ஓ.பி.எஸ் தரப்பு கொடுத்த, இந்த மனு மீது உரிய பதிலை 28ம் தேதியான நாளைக்குள் அளிக்க சசிகலாவு க்கு தேர்தல் ஆணையம் கடந்த 17ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இதை யடுத்து சசிகலாவை பெங்களூர் சிறையில் வைத்து, டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசித்தார். தேர்தல் ஆணைய த்திற்கு பதில் அளிப்பதற் கான வேலையில் அவர் ஈடுப ட்டுள்ளார்.
எனவே, இன்றைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை தயார் செய்து,
அதில் சசிகலாவின் கையெழுத்தை பெறுவதற் காக இன்று மாலை டி.டி.வி.தினகரன் பெங்களூரு செல்வார் என்று கூறப் படுகிறது..