எடப்பாடி வெற்றி செல்லாது? ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு?

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் ஒரு முறை கொண்டு வந்து, தோல்வி அடைந்தால் அடுத்து முறை நம்பிக்கை வாக்கெடுப்பு 6மாதம் கழித்து தான் மீண்டும் கொண்டு வர முடியும்.
எடப்பாடி வெற்றி செல்லாது? ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு?
ஆனால், இன்று தமிழக சட்ட சபையில் காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்தார். 

தி.மு.க., உட்பட எதிர் கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு இடையில், சபையில் முதல் பிளாக் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் 65 பேர் எழுந்து நின்று வாக்களித்தனர். 

அதில் 5பேர் எழுந்து நிற்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

அதை தொடர்ந்து சபை ஒத்தி வைக்கப் பட்டது. அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்து விட்டது என்பது தான் மரபு.

அடுத்து ஒரு மணிநேரம் கழித்து துவங்கிய சபையிலும் அமளி ஏற்பட்டு மீண்டும் சபை தள்ளி வைக்கப் பட்டது.

பின்னர் மூன்று மணிக்கு துவங்கி சபையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவ ரையும் கட்டயாப் படுத்தி வெளியேற்றி, 
அ.தி.மு.க., எம்.எல்.ஏ க்கள் மட்டுமே சபையில் இருந்த நிலையில் எடப்பாடி ஒரே நாளில் இரண்டாவது முறை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இது சபை மரபை மீறிய செயல்.

அதில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தாக எடப்பாடி கொண்டு வந்த நம்பிக்கை எடுக்கக் கோரிய தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர் தனபால்.

இது குறித்து தமிழக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறுகை யில், சபை விதிப்படி ஒரு தீர்மானம் முன்மொழிய ப்பட்டால், அதே தீர்மானம் மீண்டும் சபையில் கொண்டு வர முடியாது.

திரும்ப கொண்டு வர வேண்டும் என்றால், முதலில் முன் மொழிந்த தீர்மானம் தோற்று விட்டது என்று அர்த்தம். அப்படி தோற்றுப் போன தீர்மான த்தையும் உடனடியாக கொண்டு வர முடியாது.
அடுத்த 6 மாதம் கழித்துத் தான் அவையில் அதே தீர்மானத்தை முன்மொழிய முடியும். ஒரு மணி நேரத்தில் திரும்ப கொண்டு வந்தால் அது விதி முறைப்படி செல்லாது. 

எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது முறையாக தீர்மானத்தை முன்மொழிந் துள்ளதால் அவை நடவடிக்கை செல்லாது என்று ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
Tags:
Privacy and cookie settings