தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதை யடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்வு செய்தது.
இத்தகவல் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப் பட்டது. இதை யடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இதில் சில விளக்கம் கேட்டதுடன், அதிமுக அதிருப்தி எம்.பி. சசிகலா புஷ்பா அளித்த புகார் மீதும் தேர்தல் ஆணையம் அதிமுகவிடம் விளக்கம் கேட்டுள்ளது.
சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி தேர்தல் ஆணை யத்தின் பரிசீல னையில் உள்ள நிலையில், கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சை யாகியது.
சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது சட்ட விரோதமானது என பன்னீர் செல்வம் தரப்பில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று உள்ள சசிகலா தன்னுடைய அக்காள் மகனும் அ.தி.மு.க வின் பாராளுமன்ற
முன்னாள் உறுப்பின ருமான டி.டி.வி. தினகரன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்து உள்ளார்.
இந்நிலையில் பன்னீர் செல்வம் தரப்பு அதிமுக எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க நேரம் கோரினர்.
தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கியதை அடுத்து அவர்கள் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சந்தித்து பேசுகி ன்றனர் என தெரிவிக்க ப்பட்டு உள்ளது.
அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு பொறுப்பு வழங்க பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து கருப்பசாமி பாண்டியன் விலகினார் என்பது குறிப்பிடத் தக்கது.