தேர்தல் ஆணையத்தை எச்சரித்த நீதிபதிகள் !

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் புத்தக வடிவில் தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று எச்சரித்தனர்.
தேர்தல் ஆணையத்தை எச்சரித்த நீதிபதிகள் !
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்துத் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராம்மோகன் ராவ், எஸ்.எம். சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜர் ஆனார்.

அப்போது, வழக்கு விசாரணை தள்ளிவைக்க வேண்டும் என்று எண்ணுவதை விட, வேறு எதையும் செய்ய தேர்தல் ஆணையம் முன்வர வில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைப் புத்தக வடிவில் தாக்கல் செய்யாதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன், எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் எச்சரித்தனர். 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் 20-ம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது.
Tags:
Privacy and cookie settings