ஊடகங்கள் தன்னுடைய எதிரி மட்டுமல்ல, அமெரிக்க மக்களின் எதிரி என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட் டுள்ளார்.
ஊடகங்கள் பொய்ச் செய்திகளை வெளியிடுவ தாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ் சாட்டினார்.
இதை யடுத்து அவரது செய்தியைச் சேகரிப்பதைப் புறக்கணித்து அனைத்துச் செய்தியா ளர்களும் வெளியேறினர்.
இதையடுத்து ஊடகங்க ளைக் கடுமையாகச் சாடியுள்ள டொனால்டு டிரம்ப், ஊடகங்கள் தனக்கு மட்டும் எதிரியல்ல என்றும், அவை அமெரிக்க மக்களுக்கே எதிரி என டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட் டுள்ளார்.
இதனிடையே ஊடகங்களைப் பகைத்துக் கொள்ளும் டிரம்ப் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கருத்துத் தெரிவித் துள்ளார்.
ஊடகங் களைச் சாடுவதிலேயே டிரம்ப் நேரத்தை வீணாக்காமல் ஆட்சி நிர்வாகத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என மால்கம் டர்ன்புல் குறிப்பிட் டுள்ளார்.