இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி சுட்டு கொலை !

ஓசூர் அருகே விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி சுட்டு கொலை !
ஓசூர் அருகே உள்ள சானமாவு கிராமத்தை சேர்ந்த சேஷாத்திரி என்பவருக்கு உப்பரதம் மன்றப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. 

அங்கு கொட்டகை அமைத்து சில ஆடுகளை பராமரித்து வரும் அவர் இரவில் அங்கு தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் அவர் காவல் பணிக்கு சென் றுள்ளார். 

அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் அவரை நாட்டுத் துப்பாக்கி யால் சுட்டுள்ளனர். இதில் விவசாயி சேஷாத்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இன்று காலை இருசக்கர வாகனத் துடன் கிழே விழுந்த நிலையில் அவர் இறந்து கிடப்பதைக் கண்ட கிராம மக்கள் போலீசாரு க்கு தகவல் தெரிவி த்தனர். 
இதை யடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சேஷாத்திரி யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர்.. 

கடந்த ஓராண்டுக்கு முன்பும் சேஷாத் திரியை மர்ம நபர்கள் இதே போன்று நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விவசாயி ஒருவர் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings