இறுதி சடங்கிற்காக இந்தியா வந்த துபாய் அரச குடும்பம் !

1 minute read
அரபு நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. சிலருக்கு சுகபோக வாழ்க்கை கிடைத்தாலும், சிலருக்கு கசப்பான அனுபவங் களும் ஏற்படும்.
இறுதி சடங்கிற்காக இந்தியா வந்த துபாய் அரச குடும்பம் !
இந்நிலையில் துபாய் அரசு குடும்பத்தினர் ஊழியர்கள் மீது எவ்வளவு பாசம் வைத்தி ருந்தனர் என்பதை ஒரு சம்பவம் உணர்த்தி யுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தையில் முகைதீன் குட்டி. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியா ளருமான ஷேக் முகமது ரஷீத் அல் மக்துமிடம் பணி புரிந்து வந்தார்.

பிரதமரின் ஷா அபீல் அரண்மனையில் போக்குவரத்துப் பிரிவில் தான் முகைதீன் குட்டிக்குப் பணி.

வேலையில் துடிப்பாக இருந்த மொய்தீன் குட்டி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வேலையில் இருந்து விலகி கேரளா திரும்பினார்.
ஆனாலும் அவருடைய பணியால் ஈர்க்கப்பட்ட அரச குடும்பத்தினர் அவரை மறக்க வில்லை.

இந்நிலையில் முகைதீன் குட்டி இறந்து விட்டதாக அரண்மனைக்கு செய்தி வந்தது. இதனை யடுத்து அரச குடும்பத்தினர் உடனடியாக கேரளா விரைந்து அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings