தலை கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தி யுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
திஹன நகரத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்த ஒருவர் மீது மற்றொரு பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி யுள்ளனர்.
பாதுகாப்பு தலைகவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை நிறுத்துமாறு பொலிஸார் கோரி யுள்ளனர்.
எனினும் உத்தரவை மீறி அவர்கள் பயணித் ததோடு முன்னால் நின்ற பொலிஸ் அதிகாரியின் துப்பாக் கியையும் பறிக்க அவர்கள் முயற்சித் துள்ளனர்.
இதன்போது மற்றுமொரு பொலிஸ் அதிகாரி யினால் சந்தேக நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப் பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் தப்பி சென்று தெல்தெனிய வைத்திய சாலையில் அனுமதியாகி யுள்ளனர்.இந்த சந்தேக நபர்கள் இருவரும் சகோதரர் களாகும்.
பிரதேசங்களில் இடம் பெறும் கொள்ளை மற்றும் போதைப் பொருள் குற்றச் சாட்டுகளின் அடிப்படை யில் இவர்கள் தேடப்படும் சந்தேகநபர்கள் என பொலிஸார் அறிவித் துள்ளனர்.
குறித்த சகோதரர்களில் ஒருவர் மீது வீடொன்றை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டமை தொடர்பில் தெல்தெனிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்யப் பட்டுள்ள துடன் அதற்கான தீர்ப்பு எதிர்வரும் மாதம் 27ஆம் திகதி வழங்கப் படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.