மீனை கருணை கொலை செய்த பூங்கா நிர்வாகம் !

அமெரிக்கா வின் சிகாகோ நகரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 90 வயதுக்கு மேல் உயிருடன் இருந்த மீன் ஒன்றை பூங்கா நிர்வாகம் கருணைக் கொலை செய்துள்ளது.
மீனை கருணை கொலை செய்த பூங்கா நிர்வாகம் !
அமெரிக்கா வின் சிகாகோ நகரில் ஷெட் அக்கு வாரியம் என்ற பெயரில் நீர்வாழ் உயிரியல் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது.

1933ம் ஆண்டு சர்வதேச கண்காட்சி நடந்த போது Granddad என்ற மீன் இந்த உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. 

ஆஸ்திரேலியா விலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த மீனை இதுவரை சுமார் 14 கோடி பேர் பார்த்து மகிழ்ந்து ள்ளனர்.

இந்நிலையில், இந்த மீன் கடந்த சில வாரங்களாக உணவு எதுவும் சாப்பிடுவ தில்லை என்றும், அதன் வேகம் மிகக் குறைந்து காணப்பட்ட தாகவும் பூங்கா நிர்வாகம் கண்டறிந்தது. 
தொடர்ந்து அதன் உடல் பாகங்கள் செயலிழந்து வந்தன. இதை யடுத்து அந்த மீனை கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கப் பட்டது. 

ஆஸ்திரேலி யாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த வகை மீன்கள் நூறு ஆண்டுகளைக் கடந்தும் ஆரோக்கி யமாக வாழக் கூடியவை என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings