காதலர்கள் மீதோ அல்லது ஆதரவு அமைப்புகள் மீது தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது.
வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
இதையொட்டி காதலர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் பரிசு பொருட் களை ஒருவருக்கு ஒருவர் வழங்குவது வழக்கம்.
காதலர் தினத்தை கொண்டாட காதலர்கள் கடற்கரை, பூங்காக்கள், பொழுது போக்கு மையங்கள், திரையரங் குகளின் முன் பூங்கொத் துடன் ஒன்று கூடுவார்கள்.
ஆனால், இது மேல்நாட்டு கலாசாரம் என கூறி சில அமைப்புகள் காதலர் தினத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
இதனால் காதலர்கள் மீது தாக்கு தலில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக சென்னை மெரினா கடற்கரை, வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கோயில்கள், சர்ச், பொது இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.
காதலர்கள் மீதோ அல்லது ஆதரவு அமைப்புகள் மீது தாக்குதல் சம்பவங் களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.