வெளிநாடுகளின் அபாயகரமான குப்பைகளை இந்தியாவில் கொட்டுவதற்கு அனுமதிப்பதா என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதி மன்றம், இந்த விவகாத்தில் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.
வெளிநாட்டு குப்பைகளை இந்தியாவில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்த பொதுநல வழக்கு,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது.
இதில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் பரேக், வெளிநாடுகளின் குப்பை களையும் அபாயகரமான கழிவு களையும் இந்தியாவில் கொட்டு வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்குவ தாகவும்,
இதனால் பொதுமக்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப் படுவதாகவும் எடுத்துரைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல் பணத்திற்காக வெளிநாடுகளின்
அபாயகரமான கழிவுகளை, நம் நாட்டில் கொட்டுவதற்கு அனுமதிப்பதா? என மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் முக்கிய மான பிரச்னை என்பதால், மத்திய அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்ப டியும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 31-ம் தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.